Tamil Nadu latest headlines news till afternoon 15th march 2024 flash news details here | TN Headlines: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள்



TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதில் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான அறிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் படிக்க

Lok Sabha Election 2024 Date: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு- தேர்தல் ஆணையம்

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன்  முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை  தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க

PM Modi Speech: “தி.மு.க. தமிழ்நாட்டின், தமிழ் பண்பின் எதிரி” : பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி அகத்தீஸ்வரத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், “கன்னியாகுமரி எப்போதும் பா.ஜ.க.விற்கு ஏராளமான அன்பை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணி எப்போது வாய்ப்பு கிடைக்கும்? இங்குள்ள மக்களை சுரண்டலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறது” என்றார். மேலும் படிக்க

DMK: திமுக களமிறங்கும் தொகுதிகள் எது? எது? உத்தேசப்பட்டியல் இதோ!

திமுக நேரடியாக களமிறங்கவுள்ள 21 தொகுதிகள் எவைஎவை என்ற உத்தேச பட்டியல் குறித்து அரசியல் வட்டத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. குறிப்பாக திமுக தலைநகர் சென்னையை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் நேரடியாக தானே களமிறங்க திட்டமிட்டுள்ளதாம். மேலும் சென்னையை சுற்றியுள்ள தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம் – நிரந்தர தீர்வு எப்போது.?

நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் ஒரு படகை சிறைபிடித்தபோது, காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அதிலிருந்த 15 மீனவர்களை கைது செய்து காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்கின்றனர். மேலும், மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

மேலும் காண

Source link