lokesh kanagaraja directorial rajinikanth starrer thalaivar 171 title update


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
தலைவர் 171 
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தலைவர் 171 . இப்படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் போலீஸாக நடித்த ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கைதியாக இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் வெளீயாகும் அதே நாளில் ரஜினி தற்போது நடித்து வரும் வேட்டையன் படத்தின் டீசரும் வெளீயாகும் என எதிர்பார்க்கப் படுகிறது

#Thalaivar171TitleReveal on April 22 🔥 pic.twitter.com/ekXFdnjNhD
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 28, 2024
டைம் டிராவல் கதையா தலைவர் 171
லியோ படத்தைத் தொடர்ந்து தலைவர் 171 படத்திற்கான திரைக்கதையை கடந்த ஐந்து மாத காலமாக எழுதி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படம் குறித்து அவர் முன்பு பேசிய போது சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல் இரண்டிற்கும் இடையில் இருக்கும்  என்றும் இதுவரை அவர் நடித்திராத ஒரு கேரக்ராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போது அவர் சொன்னதற்கு ஏற்ப ரஜினி  கைதியாக இந்த போஸ்டரில் காணப்படுகிறார். கைகடிகாரத்தால் செய்யப் பட்டவிலங்கு அவர் கையில் மாட்டப் பட்டிருப்பது இந்தப் படம் டைம் டிராவலை மையப்படுத்தி இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். லியோ படம் முடிந்து சில காலம் அமைதியாக இருந்த ரசிகர்கள் தற்போது இந்த போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து டீகோடிங் வேலையைத் தொடங்கியுள்ளார்கள்.
வேட்டையன்
தற்போது ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்க அனிருத் இசையமைக்கிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ரானா டகுபதி , துஷாரா விஜயன், மஞ்சு வாரியர்  , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அனேகமாக வேட்டையன் படத்தின் டீசரும் தலைவர் 171 படத்தின் டைட்டிலும் ஒரே நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. கூடிய விரைவில் ரஜினி ரசிகர்களுக்கு டபுள் தமாகா காத்திருக்கிறது

மேலும் காண

Source link