உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா
2024ம் ஆண்டிற்கான செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகி பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்சன் செண்டரில் நடைபெற்ற போட்டியை, பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோஹர் மற்றும் 2013 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மேகன் யங் ஆகியோர் தொகுத்து வழங்கினர். லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் படிக்க
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – மார்ச் 16 வரை நீட்டித்து அறிவிப்பு
இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைவதாக இருந்த நிலையில் வரும் மார்ச் 16ம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் படிக்க
தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலகிய அருண் கோயல்!
மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், தற்போது மற்றோர் தேர்தல் ஆணையர் பதவியும் காலியாகியுள்ளது. பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதே பெரும் சர்ச்சையை கிளம்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது..!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் படிக்க
நாடு முழுவதும் முடங்கும் ரயில் சேவை? விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று நாடு முழுவதும், ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மறியல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
மேலும் காண