Top News India Today Abp Nadu Morning Top India News January 15 2024 Know Full Details | Morning Headlines: தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு! சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்


கோலாகலமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு – சீறி வரும் காளைகள், காளையர்கள்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றது. மேலும் படிக்க..

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.. பொங்கல் வைக்க சிறந்த நேரம் எது தெரியுமா?

தமிழ்நாட்டில் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதத்தின் முதல் நாளை பொங்கல் பண்டிகையாகவும், அதற்கு அடுத்த நாளை மாட்டுப்பொங்கலாகவும், மூன்றாவது நாளை காணும் பொங்கலாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். உணவை அளிக்கும் விவசாயிகளை போற்றும் வகையில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையாக கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடி வருகிறோம். இரண்டாவது நாள் விவசாயத்திற்கு பெருமை சேர்க்கும் கால்நடைகளை போற்றும் விதமாக மாட்டுப் பொங்கலாக கொண்டாடி வருகிறோம். மேலும் படிக்க..

”சாமியே சரணம் ஐயப்பா” – சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!

சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது. கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பன்றும் நடை திறக்கப்பட்டு சில நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுபவர். அதேசமயம் கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும் படிக்க..

ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா- அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை விமர்சித்த டி.ஆர்.பாலு!

“அயோத்தி இராமர் கோயில் திறப்பு: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா” என்று கழகப் பொருளாளரும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014-ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் அந்தக் கட்சிக்கு இல்லை. இதை மறைப்பதற்கும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் அயோத்தியில் இராமர் கோயில் கட்டியதைத் தனது சாதனையாகக் காட்டி, தங்களது தோல்வியை மொத்தமாக மறைக்க நினைக்கிறார்கள். மேலும் படிக்க..

பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசு திட்டம்.. தொடரும் தடங்கலுக்கு காரணம் என்ன?

உலகளவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படும் நான்காவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, பெண்களை அதிக அளவில் பாதிக்கும் இரண்டாவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான். மேலும் படிக்க..
 

Source link