JR-One Kothari Factory Is Soon To Be Extended 50 Thousand People Will Get Jobs | JR-One Kothari: “50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு”

தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் கோடியில் புதிய காலணி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என பீனிக்ஸ் கோத்தாரி நிறுவன தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்டோமொபைல் தொடங்கி ஐடி வரை அனைத்து துறைகளிலும் ஏற்றுமதியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மாநில அரசும் அதற்கேற்றாற்போல் உள்ளூர் மற்றும் வெளிநாடு, வெளிமாநில முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு என ஈர்த்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 7,8 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் பல வெளிநாட்டு நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
இதனிடையே கடந்தாண்டு நவம்பர் 29 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சிப்காட் பகுதியில் JR-One Kothari காலணி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த விழாவில் அரசு அதிகாரிகள் முதல் JR-One Kothari நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் என  பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டை காலணிகள் ஏற்றுமதி நகரமாக மாற்ற வேண்டும் என்ற அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காலணி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த காலனியின் முதல் நிறுவனமே JR-One Kothari தான். ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் மற்றும் ஷூடவுன் ஃபுட்வேர் கோ ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் தான் இந்த JR-One Kothari நிறுவனமாகும். இந்த தொழிற்சாலை மூலம் பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட தொழிற்சாலைக்கு 2022 நவம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு 2023 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதற்காக கோத்தாரி நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீட்டில் இந்த காலணி  தயாரிக்கும் தொழிற்சாலையானது ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அதிகளவு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் 2வது கட்டமாக புதிய காலணி தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரம் கோடு முதலீடு செய்ய கோத்தாரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் 4 சர்வதேச காலணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஆலைகள் அமைக்கப்படும் என அந்நிறுவன தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார். இதன்மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தோல் அல்லாத காலணி தயாரிப்புக்கு புகழ்பெற்ற வியட்நாமுக்கு அடுத்தப்படியான இடத்தை தமிழ்நாடு பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

Source link