7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!

தமிழ்நாடு:

இன்று சேலத்தில் திமுக இளைஞரணி பிரமாண்ட மாநாடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கின்றனர்.

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்; 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்.

போக்குவரத்துத்துறௌ மீண்டும் எச்சரிக்கை; ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் அனுமதி இல்லை

6  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்திய அரசின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் இன்று (ஜனவரி 21ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய 100 பிஎஸ் 6 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்தியா:

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்த மகாராஷ்டிர அரசின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய – மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி

சட்டவிரோத சுரங்க அனுமதி பணமோசடி வழக்கு; ஜார்க்கண்ட் முதலமைச்சர் சோரனிடம் அமலாக்கத்துறை நேரில் விசாரணை

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும் – தேர்தல் ஆணையம் கருத்து

அசாம் மாநிலத்தில் பதற்றம்; ராகுல் யாத்திரை வாகனங்கள் உடைப்பு – பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில், தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி உயிரிழந்தார்.

விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, நேற்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.

உலகம்:

சிரியாவில் இஸ்ரேல் விமான தாக்குதல்; ஈரான் ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழப்பு

காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல முயற்சி; இந்தியரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதி – செக் குடியரசு நீதிமன்றம் தீர்ப்பு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பள்ளி விடுதி கட்டடத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் 74 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்த ஜோ பைடன்

விளையாட்டு:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது.

இந்திய டென்னிஸ் வீராங்கனையிடம் இருந்து விவாகரத்து பெற்ற பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துள்ளார்.

ப்ரோ கபடி லீக் போட்டியில் பழி தீர்க்கும் முனைப்பில் பெங்களூரு புல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி

Source link