TNPL-ன் 27 மற்றும் 28 ஆவது லீக் போட்டியானது சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளும் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளும் மோதிக் கொண்டன.
சேலம் ஸ்பார்டன்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்
டாஸ் ஜெயித்த சேலம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான எஸ்.அபிஷேக் மற்றும் பூபதி குமார் ஆகியோர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களைக் குவித்திருந்தனர்.
பின் பூபதி குமார் 27(16) ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ஆர்.விவேக்கும் 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்தடுத்து எஸ்.அபிஷேக் 29(19) மற்றும் சன்னி சாந்து 1(3) விக்கெட்டுகள் விழத் தொடங்கியன.
அடுத்து வந்த கார்த்திக் மணிகண்டன் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகளை விளாசி 40 பந்துகளுக்கு 57 ரன்களைக் குவித்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்த, பின் ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த எம்.ஈஸ்வர் 26(19) மற்றும் எம்.முகமது 16(10) என்ற ரன்களைச் சேர்த்திருந்தனர்.
சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்களை எடுத்திருந்தது. தனது சிறப்பான ஸ்பின் பவுலிங்கின் மூலம் மூன்று முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 ஓவர்களுக்கு 18 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் எம்.மதிவாணன்.
அடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ்-ன் தொடக்க வீரர் சாத்விக் 16(10) ரன்களில் அவுட் ஆக, கேப்டன் துஷார் ரஹேஜா தனது பயங்கரமான பேட்டிங்கின் மூலம் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களைப் பறக்கவிட்டு டீமின் ஸ்கோரை உயர்த்தினார். பின் இறங்கி அடிக்க முயன்று 75(43) ரன்களில் கேட்ச் அவுட் ஆனார்.
























