win star vijay talks about thalapathy vijay in eppodhum raja movie success meet | WinStar Vijay: “தளபதி விஜய் இடத்தை பிடிப்பேன்”


சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்லும் நடிகர் விஜய்யின் இடத்தை பிடிக்க ஆசைப்படுவதாக நடிகர் வின் ஸ்டார் விஜய் தெரிவித்துள்ளார். 
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வின் ஸ்டார் விஜய் நடிப்பில் எப்போதும் ராஜா படத்தின் முதல் பாகம் வெளியானது. கைப்பந்து விளையாட்டை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் எச்.முருகன். இதில் இரட்டை வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் வின் ஸ்டார் விஜய். மேலும் இப்படத்தில் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா,டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். எப்போதும் ராஜா படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட நிலையில் தணிக்கை குழுவில் 27 காட்சிகளில்  கட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எப்போதும் ராஜா படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அப்படத்தின் இயக்குநர் வின் ஸ்டார் விஜய், “சின்ன வயசுல இருந்தே எம்ஜிஆர், ரஜினி, விஜய் என எல்லாரையும் பிடிக்கும். அவங்களை பின்பற்றினாலே வெற்றி ஃபார்முலா என்பதால் அவர்களை ஃபாலோ பண்ணி வருகிறேன். எனக்கு அரசியலில் ஈடுபாடும், ஆர்வமும் கிடையாது. சினிமாவில் இருந்து விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டதால் அவரின் இடம் காலியாகி விட்டது. அதனை நிரப்ப நான் ஆசைப்படுகிறேன். 
எப்போதும் ராஜா படத்தை நான் இயக்கியுள்ள நிலையில் பெரிய நடிகர்கள் கேட்டால் அவர்களின் படங்களை இயக்குவேன். நானாக போய் வாய்ப்பு கேட்க மாட்டேன். இந்த படத்தின் ரிலீசுக்காக நான் போராடி விட்டேன். வேறு யாரின் படமாக இருந்தால் இந்நேரம் பிரச்சினை முடிந்திருக்கும். கடவுள் துணையோடு இந்த படத்தை வெளிக்கொண்டு வந்தேன். மக்கள் ஆதரவு இருந்ததால் தான் படம் இத்தனை நாள் தியேட்டரில் ஓடியது. 
தற்போது பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. அதனைப் பார்க்கும் போது, அதன் தயாரிப்பாளர்கள் சற்று யோசிக்க வேண்டும். பெரிய ஹீரோக்களின் படங்கள் வரும்போது இப்படி படங்களை ரீ-ரிலீஸ் செய்தால் அதனைப் பாராட்டலாம். ஆனால் சின்ன படங்கள் இருக்கும்போது அவர்களுடன் தான் மோதுவார்கள். இதே விஜய், ரஜினி படம் வரும்போது செய்வார்களா? .அவர்களின் கெத்தை யாரிடம் காட்ட வேண்டுமோ காட்டினால் நன்றாக இருக்கும். எப்போதும் ராஜாவின் நான் 10 ஆண்டுகளாக எடுத்தேன். பணம் ரெடி பண்ண கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. உழைப்பு என்றும் ஏமாற்றது. அதனை நம்பி நான் இருக்கேன். இந்த படம் 25 ஊரில் உள்ள தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. சின்ன படங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க:Nitish Bharadwaj: பணம் கொடுத்தால் விவாகரத்து கொடுக்க ரெடி.. மகாபாராத நடிகர் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும் காண

Source link