Electoral Bond: தேர்தல் பத்திர சட்டத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம்.. ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள்..!

அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழக்கும் தேர்தல் பத்திரம் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும், சட்ட விரோதமானது என தெரிவித்தும் அதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த சட்டத்தை கடும் எதிர்ப்பை மீறி 2018ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த சட்டம் இயற்றபடுவதற்கு முன்பாக, பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. இந்த சட்டம் இயற்றியதற்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகள் பெற்றதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி 2019ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்ட விரோதமானது என கூறி தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது.

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தற்போது எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி:

தேர்தல் பத்திரத்தின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக பாஜக பெற்றது. பெரிய நிறுவனங்கள் கறுப்பு பணத்தையே நன்கொடையாக வழங்குகின்றன. தேர்தல் பத்திர சட்டதிருத்த மசோதாக்கள் ரத்திற்கு ஆரம்பம் முதலே காங்கிரஸ் எதிர்ப்புதான் தெரிவித்து வந்தது. இதற்கு காரணம், முதலில் இதில் வெளிப்படைதன்மை இல்லை. இரண்டாவது, ஆளுங்கட்சிக்கு சாதகமான இந்த சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்மூலம் அவர்கள் நிறைய பணத்தினை பெற்று தங்களது அரசியல் சித்து விளையாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின்படி, எல்லாருக்கும் எல்லா நிலையும் இருக்க வேண்டும். தற்போது, தேர்தல் பத்திர சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பையே வழங்கியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:

மத்திய அரசு ஒரு நம்பகத்தன்மையற்ற சட்டத்தை இயற்றி, பத்திரங்கள் மூலம் நன்கொடை தரலாம். அந்த பத்திரத்தின் மூலம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தரலாம். அதை கொடுத்தார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வழங்கப்படும் நிதியை பெறும் அரசியல் கட்சிகளின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் அறிய முடியாது என்ற அடிப்படையிலான சட்டத்தை உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்து ரத்து செய்து நீதி வழங்கியுள்ளது. இதை முழுமையாக நாங்கள் ஆதரிக்கிறோம்

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம்:

உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு காப்புரிமை பெற்று தந்துள்ளது. தேர்தல் வரும்போது பெரும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கக்கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு.

என்று பல்வேறு அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Source link