மாசி மாத அமாவாசை; கரூர் ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி ஆலயத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் ரயில்வே காலனி அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன்சுவாமி ஆலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், ரயில்வே காலனி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை வீரசாமிக்கு எண்ணைகாப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மதுரை வீர சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

மாசி மாத அமாவாசை முன்னிட்டு ரயில்வே காலனி அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.

கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கைகள் வழிபடும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, மலையாள கருப்பண்ணசாமி கோவிலில் மயான கொள்ளை இடுதல், குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கைகள் வழிபடும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் திருநங்கை வினோதினி, அமைத்து வழிபட்டு வருகின்றார். இக்கோவிலுக்கு கோவை, சென்னை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான திருநங்கைகள் வந்து வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில்  மகா சிவராத்திரி முன்னிட்டு 17ஆம் ஆண்டு தீமிதி மற்றும் மயான கொள்ளை இடுதல் திருவிழா தொடங்கி நடைபெற்றது.

இதில் கடந்த  8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நாள் திருவிழா தொடங்கியது. இரவு ஏராளமான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து 2வது நாள் சனிக்கிழமை இரவு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர்.

Source link