"தேர்தல் ஆணையம் சரியாக வேலை செய்யவில்லை" முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்த பெற்ற அரிதான சித்திரகுப்தர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு   அன்னதான விழாவை துவக்கி வைத்த பிறகு,  அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து  சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும். விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு , போதை பொருட்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு இந்த தேர்தலில் வெளிப்படும் .நாங்கள் அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் எங்களுக்கு வெற்றியை தேடி தரும்.  அரசு பேருந்து ஊழியர் பகலில் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

300 , 500 வெற்றி பெறுமா ?

சட்டம் ஒழுங்கு சீரழிவை சந்தித்துள்ளது. தேர்தலில் அவர்கள் மக்களை நம்பவில்லை. ஆனால் நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்தித்தோம். அவர்கள் 300 மற்றும் 500 ரூபாய் நம்பி தேர்தலில் போட்டியிட்டார்கள். இந்த தேர்தலில் மக்கள் வெற்றி பெறுவார்களா? 300 , 500 ரூபாய் வெற்றி பெறுமா? என்பதுதான் கேள்வியாக உள்ளது.

2014 ஃபார்முலா தான் இது

கோயம்புத்தூரில் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்குகளை  மட்டுமே வாங்குவார். 2014 இல் எடப்பாடி பழனிச்சாமி தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டை அப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருந்தார், தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் ஒரு சில விஷயங்களில் கொள்கையை மீறி கூட்டணிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது, இதனால்தான் தேசிய கட்சி இல்லாத கூட்டணியை 2014 இல் சந்தித்தோம், இதை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் சுமார் 37 இடங்களில் வெற்றி பெற வைத்தனர். 2014 இல் பெற்ற வெற்றி 2024 கிடைக்கும்.

தேர்தல் ஆணையம் குளறுபடி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் அனைத்து தரப்பிற்கும் வாய்ப்பு தரும் கட்சி. உழைப்பு, அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. வாரிசு கட்சி அல்ல. முன்னாள் அமைச்சர்களோ மாவட்ட செயலாளர்களுக்கு தான் வாய்ப்பு என்ற நிலை இல்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குளறுபடியாக இருந்தது, ஒவ்வொரு தொகுதியிலும் பத்தாயிரம் வாக்குகள் வரை பெயர்கள் எடுக்கப்பட்டது.

கோவில்பட்டியில் 14 ஆயிரம் வாக்குகள் காணவில்லை. இதைத் தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் குளறுபடியாக இருக்கிறது. மாலையில் ஒரு கணக்கு மற்றும் காலையில் ஒரு கணக்கை கூறுகிறார்கள். தேர்தல் ஆணையம் அவர்களுடைய பணியை சரியாக செய்யவில்லை, இது ஜனநாயகத்துக்கு நல்லதில்லை தேர்தல் ஆணையம் வருங்காலத்தில் விழிப்போடு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.   விழாவிற்கான ஏற்பாடு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் செய்யப்பட்டிருந்தது.  இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள்  வாலாஜாபாத் பா.கணேசன்,  காஞ்சி பன்னீர்செல்வம்,  பாலாஜி  உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Source link