தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்டம் நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம் செய்யூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. மகாபலிபுரம் பகுதியில் மிக கனமழையும் பதிவாகி இருந்தது. செங்கல்பட்டில் 71 மில்லி மீட்டர் மழை,  திருப்போரூரில் 58 மில்லி மீட்டர்,  கேளம்பாக்கத்தில் 76 மில்லி மீட்டர்,  திருக்கழுக்குன்றத்தில் 86 மில்லி மீட்டர்,  மகாபலிபுரத்தில் 122 மில்லி மீட்டர்,  மதுராந்தகத்தில் 97 மில்லி மீட்டர்,  செய்யூரில் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது

இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் பள்ளி விடுமுறை விடுவதில் தாமதம் ஏற்படுவதால் உணவுகள் வீணாகி வருகின்றன. தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் முக்கிய திட்டமாக காலை உணவு திட்டம் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள்   பயனடைந்து வருகின்றனர்.

தாமதமாகும் அறிவிப்பு

காஞ்சிபுரத்திலும் நேற்று மழை பெய்து நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 5: 40 மணி அளவில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். செங்கல்பட்டில் மிக கனமழை பெய்திருந்த பொழுதும் , காலை முன்கூட்டியே பள்ளி விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. பள்ளிகள் விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகியதால் வழக்கம் போல் 6:00 மணிக்கு காலை உணவு திட்டங்களை அனைத்து பள்ளிகளுக்கும் தயார் செய்ய துவங்கி விட்டனர். இந்த நிலையில் 7:11 அளவில் தாமதமாக பள்ளி விடுமுறை குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டார். கடந்த மழைக்காலங்களிலும் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து விடுமுறை அறிவிப்பு தாமதமாகவே வந்தது.

இதனால் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட உணவுகள் வீணாகி உள்ளன. காலை உணவு திட்டம் என்பது 8 மணிக்கு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் தயாராக வைத்திருப்பதால் பள்ளி விடுமுறை குறித்து குறைந்தபட்சம் 6 மணிக்காவது தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்களுக்காக சமைக்கும் உணவுகள்  மாணவர்கள் வராததால் வீணாகி விடாமல் இருக்க,  சில இடங்களில்  ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

செய்ய வேண்டியவை என்ன ?

இதன்பிறகு  காலை உணவு திட்டம் வீணாகாமல் இருப்பதற்கு  விடுமுறை   முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.  6 மணிக்கு உள்ளாகவே விடுமுறை அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில், மாணவர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும், அதே போன்று காலை உணவும் வீணாகாமல் தடுக்கலாம்.  குறைந்தபட்சம் 6:30   மணிக்கு முன்பே , விடுமுறை  அறிவிப்பை வெளியிட்டால்  உணவு வீணாகுவதை தடுக்கலாம்.

இதேபோன்று தொலைதூரத்தில் இருக்கின்ற மாணவர்கள்  குறிப்பிட்ட அரசு பேருந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதால்,  அவர்கள் 7:00 மணிக்கு எல்லாம் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டிய நிலை உள்ளது.  அது போன்ற மாணவர்களுக்கும் விரைவாக மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் பொழுது பயனுள்ளதாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் விரைவாக முடிவுகளை எடுத்து உணவு வீணாகுவதை தடுக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமில்லாமல்,  அனைத்து மாவட்ட நிர்வாகமும் இதை செயல்படுத்த முன்வர வேண்டும். அரசும் இதற்கான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Source link