Lok Sabha Election 2024 Admk Alliance Puratchi Bharatham Party Issue – TNN | Lok Sabha Election 2024: அதிமுகவிற்கு போர்க்கொடி காட்டிய புரட்சிபாரதம்

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருமணநல்லூர் அருகில் உள்ள பெரியசெவலை பகுதியில் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார் சி.வி.சண்முகம்.
புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த புரட்சி பாரதம் கட்சியினர் பாஜகவுடன் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விழுப்புரத்தில் வேட்பாளர் மாற்றமா ?
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள பெரிய சவாலை பகுதியில் 50க்கும் மேற்பட்ட புரட்சி பாரதம் கட்சியினர் ஒன்று கூடி அதிமுகவுக்கு எதிராகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதிமுகவுக்கு எதிரான புரட்சி பாரதம் கட்சியினரின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார் சி.வி.சண்முகம். தற்போது அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டு விழுப்புரத்தில் புரட்சி பரதம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) இன்று தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12,095 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Source link