Virat Kohli In Royal Challengers Bangalore’s New Jersey Ahead Of Unbox Event In Bengaluru


சி.எஸ்.கே – ஆர்.சி.பி:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. 
அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
முக்கியமாக சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் ஆர்.சி.பி அணி வீரர் விராட் கோலி களம் இறங்குவதை காண்பதற்காகவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக எம்.எஸ்.தோனி ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதாலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நீண்ட நாட்களாக விராட் கோலி விளையாடாமல் இருப்பதாலும் தான் இந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
புதிய ஜெர்சியில் விராட் கோலி:
இந்நிலையில் தான் ஆர்.சி.பி  அன்பாக்சிங் நிகழ்வுக்கு முன்னதாக புதிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஜெர்சியில் விராட் கோலி இடம்பெற்றிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூல வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றன.
கடந்த 16 சீசன்களாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. அதேநேரம் பெண்கள் ப்ரீமியர் லீக் போட்டியில் முதன் முறையாக பெங்களூர் அணி கோப்பையை வென்று அசத்தியது. 

Virat Kohli in RCB’s new jersey. pic.twitter.com/NqifbIzQNJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 19, 2024

இதனால் இந்த முறை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஐபிஎல் முழுவதும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 
 
 
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 

மேலும் காண

Source link