ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி தீபாவை வம்பிழுக்க மறுபக்கம் ரியா ஆனந்தை ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திக் தீபாவிடம் “கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு என் மேல காதல் இருந்திருக்கு, அதை ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கேட்டு, “இனிமே நீங்க சார் எல்லாம் சொல்லி கூப்பிடாதீங்க, வேற மாதிரி மாமா வாங்க போங்கன்னு கூப்பிடுங்க” என்று சொல்லி, “இல்ல வேண்டாம் அது ரொம்ப பழசா இருக்கு. மீனாட்சி எல்லாம் வாங்க போங்கன்னு கூப்பிடுறாங்க, நீங்களும் அதே மாதிரி சொல்லுங்க” என்று சொல்ல தீபா வாங்க போங்க எனப் பேசி பழகுகிறாள்.
இதைத் தொடர்ந்து தீபா விளக்கு போடுவதற்காக கோயிலுக்கு கிளம்பிச் செல்ல, அபிராமிக்கு பதில் அவளுடன் மீனாட்சி வருகிறாள். “என்னக்கா எப்பவும் அத்த தான வருவாங்க, இன்னைக்கு நீங்க வந்து இருக்கீங்க?” என்று கேட்க, “இன்னைக்கு எனக்கு கல்யாண நாள், அதனால விளக்கு போட வரேன்” என்கிறாள்.
பிறகு இருவரும் கோயிலுக்குச் சென்று விளக்கு போட்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ரியா மற்றும் ஆனந்த் ஒன்றாக வருவதைப் பார்க்கிறாள் தீபா. மீனாட்சி இதைப் பார்த்து விடாமல் தடுத்து “எனக்கு ஒருத்தர சந்திக்க வேண்டிய வேலை இருக்கும் நான் பாத்துட்டு வந்துடுறேன்” என சொல்லி மீனாட்சியை வீட்டுக்கு அனுப்புகிறாள்.
அதன் பிறகு தீபா அவர்களை பின்தொடர்ந்து செல்ல, இருவரும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு செல்வது தெரியவர, தீபா கார்த்திக்கு போன் போட, போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Kanguva Teaser Secrets: பெருமாச்சி என்றால் இதுதான் அர்த்தம்…சூர்யாவின் கங்குவா டீசர் ஒரு அலசல்
Vijay Sethupathi: சாதி, மதத்தை வைத்து ஓட்டு கேட்டால் போடாதீங்க.. நடிகர் விஜய் சேதுபதி அதிரடி!
மேலும் காண