புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ்-16, பாஜக -10, அதிமுக – 2, எல்ஜேகே -2 என தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்டன.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என கூட்டணி அமைத்து நின்றன.

விஜய்யின் தவெக.-28 தொகுதிகளில் தனித்தும், அதன் கூட்டணியாக நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிட்டது.

நாம் தமிழர் கட்சி 28 தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில், 117 சுயேச்சைகள் உள்பட 294 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

என்.ஆர்.காங்கிரஸ் – 12

திமுக – 5

பாஜக – 4

தவெக – 2

காங்கிரஸ் – 1

அதிமுக – 1

எல்ஜேகே – 1

நேயம் மக்கள் கழகம் – 1

சுயேட்சைகள் – 3

 

இதில், தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களை விட கூடுதலாக வெற்றி பெற்று, 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் – 12

பாஜக – 4

அதிமுக – 1

எல்ஜேகே – 1

 

இதே காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் – 1

திமுக – 5

 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்த நேயம் மக்கள் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports