தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதிமுகவும், திமுகவும், பெரும்பான்மை இல்லாத‍தால், யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக ஆதரவு அளித்தால் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், விஜய் அழைப்பு விடுத்தால், தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தான் அப்படி ஒரு தகவலை வெளியிடவில்லை என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிமர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும், அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தனது கருத்துகள் அல்ல, தான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை, தனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றும் சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.


  1. tivgxeivis Avatar

    dvqeeqgvjjigmtxjnzzgnuodvezpdv

  2.  Avatar
    Anonymous

    நீ ஆதரவு தெரிவிச்சிதா தளபதி சிஎம் ஆகனும்னு இல்லடா வென்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed