ஈராக்கில் ரெய்டு ஒன்றில், பெண் ஒருவரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், தங்கக் கட்டிகளும், தங்கத்தால் ஆன ப்ரா, ஜட்டியும் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தாக்குதலால் உருக்குலைந்து இருந்த ஈராக், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கர்களிடம் இருந்து தப்பித்த ஈராக், இன்று ஊழல்வாதிகளிடம் சிக்கி தவித்து வருகிறது.

இந்நிலையில்தான், அந்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளில் திடீரென அந்நாட்டு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.

ஈராக்கில் பெண் எம்பியாக உள்ள ஹிந்த் அல் அப்பாசி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, 57 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஈராக் தினார் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 27 கிலோ சுத்த தங்கக் கட்டிகளும், தங்கத்தால் செய்யப்பட்ட ப்ரா ஜட்டி என உள்ளாடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்றாலும், பல்வேறு பிரபலமான செய்தியாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதனால், உண்மையாக இருக்க‍க்கூடும் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதே நேரத்தில், பல அரசியல்வாதிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports