2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும், தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள் என்றும் வி த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை உறுதி

கோரிக்கைகளுக்கு தவெக அரசு செவிசாய்யாக்காவிட்டால் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் நடந்த மாநாட்டில் பேச்சு…

—————-

38 நாட்களில் 19 லட்சம் பேர் வி த லீடர்ஸ் அமைப்பில் இணைந்துள்ளதாகவும், அவற்றில் 17% பேர் பெண்கள் என்றும் அண்ணாமலை பெருமிதம்…

தனது கட்சியில் அனைவரும் தன்னார்வலர்கள் தான் என்றும், தானும் ஒரு தன்னார்வலர் என்றும் கருத்து…

—————-

இந்த ஆண்டு தவெக அரசு ரூ.85 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் வாங்க உள்ளதாக அண்ணாமலை கணிப்பு…

தவெக ஆட்சி நிறைவு செய்யும்போது தமிழ்நாட்டில் கடன் ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் அதிகரிக்கும் என்றும் கவலை…

—————-

தமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.4.15 லட்சம் இருப்பதாக அண்ணாமலை தகவல்…

பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை, கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்ற முடியாது என்றும் வேதனை…

—————-

வி த லீடர்ஸ் அமைப்பு கண்டிப்பாக அரசியல் கட்சியாக மாறும் என்று அண்ணாமலை உறுதி…

தனது அமைப்பில் இணைந்துள்ள தன்னார்வலர்களை எம்எல்ஏக்களாக, அமைச்சர்களாக, எம்பிக்களாக மாற்றப்போவதாக திட்டவட்டம்…

—————-

அண்ணாமலை தவெக அரசை பாராட்டியுள்ளதாகவும், அவரது ஆரோக்கியமான கருத்துக்களை ஏற்பதாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம்…

தீயசக்தியைத் தவிர, வேறு யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என்றும் கருத்து…

—————-

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் மொத்தமாக 7.39 லட்சம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அதிர்ச்சித் தகவல்…

உண்மையை உணர்ந்து கொண்டு அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல்…

—————-

ஆந்திர மாநிலம் கடப்பாவில் மீண்டும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் அச்சம்…

கடந்த 2 வாரத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்தரவு…

—————-

மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்ட மறைந்த பாடகி எஸ். ஜானகி உடலுக்கு, ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் அஞ்சலி…

காவல்துறையின் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதைக்குப் பின், கனியனஹுண்டி கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஜானகியின் உடல் தகனம்…

—————-

அமெரிக்காவின் தொடர் தாக்குல் காரணமாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு…

கச்சா எண்ணெய் விலை அண்மையில் குறைந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கும் ஆபத்து…

—————-

ஹார்முஸ் நீரிணை அருகே ஸைப்ரஸ் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது ஈரான் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஒரு இந்தியர் மாயம், 10 இந்தியர்கள் மீட்பு…

வணிக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்…

—————-

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பார் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழப்பு…

வெளியேற முடியாத‍தால், புகை மூட்டத்தில் இருந்து தப்பிக்க கழிவறைக்குள் பலர் புகுந்த பலர், அங்கேயே மரணித்த‍தாக தகவல்…

—————-

கொலம்பியாவின் புகாரமங்காவில் நடந்த 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியா 5 தங்கம் வென்று அசத்தல்…

87 நாடுகளை சேர்ந்த 381 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற 5 இளம் இயற்பியலாளர்கள் தங்கம் வென்று பெருமை சேர்ப்பு…

—————-

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில், சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியது…

அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்துடன் அர்ஜென்டினா மோத உள்ளதால், ஐரோப்பா முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரிப்பு…


கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது தெரியும்” – முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если запой продолжается много дней, больной страдает хроническими болезнями или уже переносил алкогольный психоз, вызов врача особенно важен. В тяжелом…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed