‘நலம் TN’ இணைய தளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இணையதளத்தில் மக்கள் எளிதாகப் பெற உதவும் வகையில் ‘நலம் TN’ தொடக்கம்
மருத்துவ துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
மாற்றுத்திறனாளி பிரிவில் தேர்வான மருத்துவருக்கு மேடையில் இருந்து இறங்கிச் சென்று பணி நியமன ஆணையை விஜய் வழங்கினார்
—————————-
‘தாய்மாமன் தங்க மோதிரம்’- 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு
தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்
அண்ணா பிறந்தநாளான செப்.15-ந்தேதி தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
Read more 14.07.2026 தலைப்புச் செய்திகள் – Headlines | actpnews.com – ACTP news Tamil
நாகர்கோவில்: சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் – வெளியான அதிர்ச்சி தகவல்
சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் சிறை வார்டன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சபரிவர்மன் உடலில் கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம் – உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்
சபரிவர்மன் மரணம் தொடர்பாக 3 பேர் சஸ்பெண்ட் செய்து சிறைச்சாலை எஸ்.பி. உத்தரவு
————————–
சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டம் – மாற்றுத்திறனாளி காவல் மரணத்தில் உதயநிதி காட்டம்
ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி அன்றே சொந்த ஜாமினில் விடுவிப்பு – உதயநிதி
சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் – உதயநிதி
சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் – உதயநிதி
—————————-
தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையை கையில் எடுத்த அமலாக்கத்துறை
தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் ஹவாலா பணம் கைமாறியிருப்பதாக கூறப்படுவதால் நடவடிக்கை
கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்க திட்டம்
செந்தில்பாலாஜி, அவரது சகோதர்ர் முன்ஜாமின் பெற்றுள்ள நிலையில், அமலாக்கத்துறை தீவிர விசாரணை
—————————–
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி 17ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
அரியானா மாநிலம் ஜிந்த் நகரில் இருந்து, சோனிப்பட்டுக்கு ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது
மின்மயம் ஆக்கப்படாத வழித்தடமாக உள்ள இடத்தில், ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயலை வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
—————————
2031க்குள் 20,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை தமிழகம் முழுவதும் அமைக்க தமிழக அரசு முடிவு
சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏதுவாக தனியாக துணை மின்மீட்டம் அமைக்க அனுமதி வழங்க முடிவு
புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்க கூடுதல் மின் உள்கட்டமைப்புகள் உருவாக்க வேண்டி உள்ளது
அரசின் சலுகைகள் மற்றும் கொள்கை திருத்தங்களால், சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பு
————————–
டெல்டா மாவட்டங்களில் மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
மணல் குவாரிகளை ஆன்லைன் மூலம் அரசே நேரடியாக இயக்க பரிசீலிப்பதாக தகவல்
அமலாக்கத்துறை சோதனையால் மூடப்பட்ட 12 ஆற்று மணல் குவாரிகளையும் திறக்க திட்டம்
ஒப்பந்தம் விடப்படுவதால் முறைகேடு நடக்கும் என்பதால் மணல் குவாரிகளை அரசே இயக்க திட்டம்
———————–
12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி அறிவுறுத்தல்
மணல் குவாரிகள் திறக்கப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் – அன்புமணி எச்சரிக்கை
காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது – அன்புமணி
காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் 5கி.மீ.க்கு ஓரிடத்தில் தடுப்பணைக கட்ட வேண்டும் – அன்புமணி வேண்டுகோள்
———————————-
கொள்கை கூட்டணி என்ற காங்கிரஸ், பதவிக்காக தவெகவுடன் சென்றுவிட்டதாக ஈபிஎஸ் விமர்சனம்
இதில் கொள்கை எங்கு உள்ளது? என்றும், காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளதாகவும் ஈபிஎஸ் கருத்து
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போன்று அதிமுக தேய்கிறது – ஈபிஎஸ் கருத்து மாணிக்கம் தாகூர் பதிலடி
காங்கிரஸை விமர்சிப்பதை விட்டுவிட்டு, அதிமுகவை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் மாணிக்கம் தாகூர் தாக்கு
——————————-
ரூ.100 கோடி நில மோசடி: அமைச்சர் ரமேஷ் மீது பொய்யான அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமைச்சர் ரமேஷ்க்கு எதிராக அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு
சில யூடியூப் செய்தி நிறுவனங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக புகார்
சமூக வலைதள பக்கங்களில் அமைச்சர் ரமேஷ் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
——————————-
லண்டனில் இன்பன் உதயநிதி பட்டமளிப்பு விழா: பேரனை கட்டியணைத்த மு.க.ஸ்டாலின்
இன்பநிதி மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலை.யில் விளையாட்டு மேம்பாடு தொடர்புடைய பட்டப்படிப்பை முடித்துள்ளார்
பட்டமளிப்பு விழாவுக்கு சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் பேரனை கட்டித் தழுவி வாழ்த்தினார்
பாட்டி துர்கா ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்தினர்
——————————-
தமிழகத்தில் குதிரை பேரம் இப்போது நடந்து கொண்டிருக்கிறத – சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
குதிரை பேரம் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல, தடுத்து நிறுத்த வேண்டும் – சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கட்சிகளால் தனித்து நிற்க முடியும் – சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
சிபிஐ, சிபிஎம், சிபிஎம்எல் கட்சிகளுக்கு நாடு முழுவதும் கட்சி கட்டமைப்பு உள்ளது – வீரபாண்டியன்
——————————–
‘ஒரு மொழியை கற்றுக்கொள்வது ஒருபோதும் வீணாகாது’ – மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து
மும்மொழிக் கொள்கைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
——————————–
9, 10-ஆம் வகுப்புகளில் 3-வது மொழித் தேர்வு தேர்ச்சி இனி கட்டாயம்: சிபிஎஸ்இ உத்தரவு!
தற்போதைய கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என அறிவிப்பு
——————————–
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரர்,டாக்டர் அனில் மேனன் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம்எஸ் 29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தார்
ரஷ்ய விண்வெளி வீரர்கள் பியோட்டர் டுப்ரோவ்,அன்னா கிகினா ஆகியோரும் விண்வெளிக்கு சென்றுள்ளனர்
8 மாதங்கள் ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூமிக்குத் திரும்புகின்றனர்
——————————–
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
ஆல்ரவுண்டர் அக்சர் படேல் 57 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்
அபார ஆட்டம்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ODI-யில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
75 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 80 ரன்கள் எடுத்தார் கில்
#TamilNadu #PoliticalNews #ChennaiNews #BreakingNews #TamilNews #ACTPNews

















