தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்
வழிநெடுகிழும் ஏராளமான மக்கள் கூடி நின்று வரவேற்பு அளித்தனர்

சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது எம்எல்ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
பொது இ -சேவை மையத்தில் பயனாளிகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசின் சான்றிதழ்களை வழங்கினார்

பெரம்பூர் தொகுதிக்கான ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம்
பெரம்பூர் தொகுதியில் கொண்டுவரப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை

பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறக்கும் நிகழ்ச்சியின்போது பத்திரிகையாளர்களை வெளியே நிறுத்தி வைத்த‍தால் அதிர்ச்சி…
பொதுமக்களோடு பொதுமக்களாக மட்டுமே நிறுத்தப்பட்டதாக பத்திரிகையாளர்கள் வேதனை

மதுரை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழப்பு…
குழந்தைகள் உட்பட படுகாயமடைந்த பலர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி…

 

Read more : கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது தெரியும்” – முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு…
படுகாயமடைந்த 7 பேருக்கு ரூ.1 லட்சமும்,15 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கவும் உத்தரவு…

முதல்வர் விஜய் ஒரு தலைமுறையையே பாழ்படுத்தி கொண்டிருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேதனை..
ஒரு தலைவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது… எந்த முதலமைச்சராவது இந்த மாதிரி பேசியிருக்காங்களா? என்றும் கேள்வி…

ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை என சுகாதாரத்துறை தகவல்…
கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் விளக்கம்…

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அருண், திடீரென தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக பணியிட மாற்றம்…
லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதிய இயக்குநராக மகேஸ்வரி நியமனம்…

அயோத்தி ராமர் கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தில் ரூ.3 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல்…
நன்கொடை முறைகேடு வழக்கில் கைதான 8 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு…

 

Read more : இனி தமிழ்த்தாய் வாழ்த்து முதலில், இரண்டாவது வந்தே மாதரம் – மத்திய அரசு அதிரடி | actpnews.com – ACTP news Tamil

ரயில் பெட்டி ஒன்றுல் பூசாரி ஒருவர் ஆன்மீக பூஜை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி…
முன்பதிவு செய்யப்பட்ட பிரத்யேக பெட்டி என்றும், சொகுசு பெட்டிகளில் பயணம் செய்வோர் தேவையான பூஜைகளை தகுந்த அனுமதியோடு நடத்திக்கொள்ள அனுமதி உண்டு என்று ரயில்வே விளக்கம்…

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைப்பு…
16 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்…

ஹார்மூஸ் நீரிணையை ஈரானிடம் இருந்து காப்பாற்றியது அமெரிக்காதான் என்றும், அதற்கான பலன்கள் தங்களுக்கு வேண்டும் என்றும் டிரம்ப் கருத்து…
ஹார்மூஸ் நீரிணை வழியாக செல்வது தற்போது சாத்தியமற்றது என்று டிரம்பின் பேச்சுக்கு ஈரான் பதிலடி

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது…
டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இந்கிலாந்து முழுமையாக கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரிப்பு…

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது

தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது
வரும் 22ஆம் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்

ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பவானிசாகர் அணையிலிருந்து சிறப்பு தண்ணீர் திறக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு..
ஜூலை 28ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என்றும் தகவல்…

தவெகவில் இணையலாம் என்று நிர்வாகிகள் பலர் கூறியதன் அடிப்படையில் சொந்த விருப்பதிலேயே சேர்ந்த‍தாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…
தவெகவில் சேர சொல்லி யாரும் அழுத்தம் தரவில்லை என்றும், தன்னுடைய பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கம்…

பழனி கோயில் விடுதிகளின் கட்டணத்தை ரூ.300 முதல் ரூ.1500 வரை, தவெக அரசு உயர்த்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…
ஏழை முருகப் பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளதாகவும், விஜய் அரசின் ஆன்மிக விரோதப் போக்குக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பதிவு…

பிரதமர் மோடி வரும் 17ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்…
ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப்பில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், முக்கியத்துவம் பெற்றுள்ளது…

ராமர் கோயிலில் ஆர்எஸ்எஸ் அமைப்பால் திட்டமிட்டு நன்கொடை திருட்டு நடத்தப்பட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு…
மக்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சினையில் பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? என்றும், ஏன் திருடர்களுக்கு உதவ இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்றும் கேள்வி

அமெரிக்காவில் கடைசி போலியோ நோயாளி உயிரிழப்பு…
ஓக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்த 78 வயதான மார்த்தா என்பவர், போலியோ நோயுடன் நீண்ட காலம் போராடிய நபர் என்று மருத்துவர்கள் இரங்கல்…

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 4% அதிகரிப்பு…
அமெரிக்கா ஈரான் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் ஆபத்து…

#ChennaiOuterRingRoad #Velmurugan #TamilNadu #Infrastructure #PoliticalNews #ChennaiNews #BreakingNews #TamilNews #ACTPNews #PublicInfrastructure

Read more : ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? நடிகை த்ரிஷா பகிர்ந்த பரபரப்பு பதிவு | Trisha Latest News


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports