ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் ஐபிஎல் தொடரில் எப்படி இருந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ஹர்திக் பாண்டியாவின் முதல் சம்பளம் எவ்வளவு?

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா ஆகியோருக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அதேபோல் தான் ஹர்திக் பாண்டியாவிற்கும். முதன்முதலில் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 21 வயதில் அறிமுகமானார் ஹர்திக். அப்போது அவரை ரூபாய் 10 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது மும்பை அணி நிர்வாகம். மூன்று ஆண்டுகள் ஐ.பி.எல் தொடரில் இதே தொகையில் தான் விளையாடினார்.  இதனிடையே தான் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் என்பதால் அணியில் இவருக்கான தேவை எப்போதும் பிரகாஷமாகவே இருந்தது. இப்படி கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் இந்திய அணியில் சிறப்பாக வெளிக்காட்டியதால் அதே மும்பை அணி இவரை கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூபாய் 11 கோடிக்கு தக்கவைத்துகொண்டது. பின்னர் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மும்பை அணிக்காகவே விளையாடி வந்தார்.

மும்பை அணியின் கேப்டன்:

இச்சூழலில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ்  அணி புதிய அணியாக ஐபிஎல்லில் அறிமுகமானது. அப்போது ஹர்திக் பாண்டியாவின் தேவையை அறிந்து கொண்ட குஜராத் அணி தங்கள் அணிக்காக ரூபாய் 15 கோடியை கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது. அதோடு மட்டும் இன்றி இவர் மீது இருந்த அபாரமான நம்பிக்கையால் குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது அணி நிர்வாகம்.  அணி நிர்வாகம் இவர் மீது வைத்த நம்பிக்கையை பொய்யாக்காமல் குஜராத் அணிக்கு அறிமுக ஆண்டுலேயே ஐபிஎல் கோப்பையை பெற்றுக்கொடுத்தார் ஹர்திக் பாண்டியா.

அதேபோல், கடந்த வருடமும் இறுதி போட்டி வரை வந்து குஜராத் அணிக்கு இரண்டாவது இடத்தை பெற்றுக்கொடுத்தார். இப்படி ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஒரு அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து சிறப்பாக வழிநடத்திய ஹர்திக் பாண்டிவின் கேப்டன்ஷி மீது கண் வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்காக இந்த ஆண்டு பாண்டியாவை வாங்கியது.

வாங்கிய கையோடு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ரூபாய் 15 கோடிக்கு வாங்கியது. அந்தவகையில் ரூபாய் 10 லட்சத்திற்கு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா தற்போது ரூபாய் 15 கோடிக்கு  ஐ.பி.எல் தொடரில் விளையாட இருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புள்ளி விவரம்:

போட்டிகள்

ரன்கள்

அரைசதம்

அதிகபட்சம்

விக்கெட்டுகள்

123

2,309

10

91

53

ஹர்திக் பாண்டியா இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் செய்த சாதனைகள்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக கேட்சுகள் (53) பிடித்த மூன்றாவது வீரர்.

ஐபிஎல் தொடரில் விரைவாக 100 (1046 பந்துகள்) சிக்ஸர்களை குவித்த இந்திய வீரர்.

ஒரு சீசனில் (2019) 400 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் இந்திய ஆல்ரவுண்டர்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற 2வது கேப்டன் (வெற்றி பெற்ற அணிக்காக)

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 50 க்கும் அதிகமான ரன்களை  4 முறை குவித்த வீரர்

Source link

Latest News

View All

1. Онлайн-платформа https://inventure.com.ua/uk про инвестиции, финансовые рынки и экономику Украины и мира. Актуальные новости, профессиональная аналитика, обзоры активов, инвестиционные стратегии и…

2. Хочешь заказать еду? https://kejtering-moskva-s-dostavkoj.ru фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей, пожеланий заказчика и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed