தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்யின் படங்களில் இருக்கும் டைட்டில் ரகசியம் ஒன்றை நடிகர் சதீஷ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இளைய தளபதி – தளபதி
இளைய தளபதியாக ரசிகர்களிடம் அறிமுகமாகி இன்று தளபதியாக கோலிவுட்டின் வசூல் மன்னனாக திகழ்கிறார் விஜய். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்தார். இந்த படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, அஜ்மல் அமீர், பிரேம்ஜி அமரன், வைபவ் என ஏகப்பட்ட பேர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
I’m Back To Online 💥Good Morning Everyone 🤗#Thalapathy69 #ThalapathyVijay #TVKVijay #Leo #GOAT𓃵 @actorvijy pic.twitter.com/K6TBLtUd5U
— HaruN PradeeP (@pradeep_harun) April 2, 2024
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்துக்குப் பின் ஒரு படம் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். அதன்பிறகு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு அக்கட்சி முழு வீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விஜய்யும் வழக்கமான அரசியல் பணிகளை தொடங்கியும் விட்டார்.
எந்த எழுத்து ராசியானது?
இதனிடையே பிரபல நடிகர் சதீஷ் நேர்காணல் ஒன்றில் பேசிய போது, “பைரவா” படத்துக்கு டைட்டில் வைப்பதற்கு முன் ஏராளமான டைட்டில்களை தான் விஜய்யிடம் கூறினேன். அதேசமயம் விஜய்க்கு என சில சென்டிமென்ட் உண்டு என்பதையும் நான் கண்டுபிடித்தேன். அதாவது “I” என ஆங்கிலத்தில் முடியும்படி டைட்டில் வந்தால் அந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்து விடும். காதலுக்கு மரியாதை, குஷி, திருமலை, போக்கிரி, சிவகாசி, திருப்பாச்சி, துப்பாக்கி, கத்தி, தெறி, என ஏகப்பட்ட படங்கள் “I” என ஆங்கிலத்தில் முடியும். குருவி, புலி போன்ற சில படங்கள் ஓடாமல் இருந்திருக்கிறது. இதனை விஜய்யிடம் சொல்லவும், என்னப்பா இவ்வளவு பயங்கரமா யோசிச்சிருக்க” என ஆச்சரியப்பட்டார் என்று அவர் கூறினார். இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இப்படித்தான் நடிகர் அஜித்துக்கு V என்ற எழுத்து ராசியாக இருந்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம், வலிமை என தன் படங்களுக்கு பெயரிட்டார். தற்போது விவேகம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் காண