mrunal thakur buy 2 flats belonged to Kangana Ranaut in Mumbai


சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur) மும்பையில் பல கோடிகள் மதிப்பிலான புது வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை
இந்தி சீரியல் உலகில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார் மிருணாள் தாகூர். பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மிருணாள் ஹீரோயினாகவும் நல்ல கதாபாத்திரத் தேர்வுகளாலும் கவனமீர்த்து  வந்தாலும், “சீதா ராமம்” எனும் ஒற்றைப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் கதாநாயகியாக மாறினார்.
அடுத்தடுத்து நானியுடன் ஹாய் நன்னா, விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் என டோலிவுட் வட்டாரத்தில் மிருணாள் கலக்கி வரும் நிலையில். தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழ் சினிமாவிலும் அவர் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. 
கங்கனாவின் வீடு
இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் தற்போது மும்பை, அந்தேரி பகுதியில் அருகருகே உள்ள இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 35 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்துள்ள இந்த வீடுகளுக்கான பத்திரப்பதிவினை கடந்த ஜன.25ஆம் தேதி மிருணாள் செய்துள்ளார். இந்த 2 வீடுகளும் ரூ.10 கோடிகள் மதிப்பிலானவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரர் மற்றும் அப்பாவுக்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பினை தற்போது மிருணாள் தாகூர் வாங்கியுள்ளதாகவும், இந்த வீடுகளை தன் ரசனைப்படி தற்போது மிருணாள் புனரமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காதல் கிசுகிசு
மும்பையின் பரபரப்பான பகுதியில் பல கோடிகளில் வீடுகள் வாங்கி மிருணாள் செட்டில் ஆகியுள்ளது தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் ஹோம்லி லுக்கில் அசத்தி மிருணாள் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் வெரைட்டி காண்பித்து நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் உலகின் புகழ்பெற்ற ராப் பாடகரான பாட்ஷாவை மிருணாள் டேட்டிங் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இணையத்தில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில், இந்தத் தகவல் தவறானது எனப் பதிவிட்டு பாட்ஷா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 
மிருணாள் – விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்திருக்கும் ஃபேமிலி ஸ்டார் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தியில் இவர் நடித்துள்ள பூஜா மேரி ஜான் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
மேலும் படிக்க: Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா – விராட் கோலி மகனுக்கு இந்தப் பெயர் ஏன் தெரியுமா?
Ranam Aram Thavarel Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதை – வைபவின் ரணம் அறம் தவறேல் விமர்சனம் இதோ!

மேலும் காண

Source link