Sun Tv Ethirneechal Serial Today Episode January 11 Promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 10) எபிசோடில் குணசேகரன் தர்ஷினியிடம் “இந்த பரீட்சை முடிந்ததும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன். இதை யாராவது தடுக்க நினைச்சாங்க அவங்களை அவ்வளவு தான் தொலைச்சுப்பிடுவேன்” என மிரட்டுகிறார். அதை கேட்டு தர்ஷினி கோபமாக வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறாள். 
 

குணசேகரன் வீட்டுக்கு உமையாளும் அவளின் ஆத்தாவும் கிருஷ்ணசாமியுடன் வருகிறார்கள். அவர்களை பார்த்து ஜனனியம் பார்வதியும் அதிர்ச்சி அடைகிறார்கள். குணசேகரன் அவர்களை வரவேற்கிறார்கள். உமையாள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைகிறார் குணசேகரன். அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார் குணசேகரன். 
அவர்கள் எதற்காக வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள் என குணசேகரன் கேட்க, ஆவேசப்பட்ட ஜனனி “அந்த ஆள் வந்து அங்க ஓட்டிகிட்டா எல்லாமே ஒரே நாள்ல முடிஞ்சுபோயிடுமா? அவருக்கு பணம் தான் முக்கியம். என்னோட வாழ்க்கை இப்படி போனதற்கு நாச்சியப்பன் தான் காரணம். நாங்க அவரைப் போல சொத்துக்காக அலையுற கீழ் தரமான ஆள் கிடையாது. இங்கே இருந்து கிளம்புங்க. வெளியே போங்க” என ஜனனி சொல்ல குணசேகரன் “ஏய் இது என்னோட வீடு. வரவங்க போறவங்களை எல்லாம் வெளிய போன்னு சொல்ற?” என எகிற சக்தி அவரை கண்டிக்கிறான். 
“எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு.  அப்பத்தாவோட சில முடிவுகள் இந்த வீட்ல இருக்கு, அதை வைச்சு தான் நான் பேசிகிட்டு இருக்கேன்” என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 
 

“ஒத்துமையா இருந்த இந்த குடும்பத்தை இந்த ஜனனி காலை எடுத்து வைச்சதும் எல்லாம் போச்சு” என விசாலாட்சி அம்மா சொல்ல, “தேவை இல்லாத பேச்சு எல்லாம் வேண்டாம். உங்க வீட்ல இருக்க இந்த பார்வதி, எங்களோட குலதெய்வ கோயிலுக்கு வந்து தாலியை கழட்டி கொடுத்து என்னோட தம்பிக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தம் இல்லனு சத்தியம் பண்ணிட்டு போகணும்” என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 
“உங்களுக்கு வேணும்னா கேஸ் போட்டு விவாகரத்து வாங்குங்க. நீங்க சொல்றதை எல்லாம் ஏத்துக்க முடியாது” என சக்தி சொல்ல “அந்த ஆளுக்கு இது தெரியுமா? அவர் சொல்லி தான் இங்க வந்தீங்களா? நான் வந்து சத்தியம் பண்ணிகொடுக்குறேன். எனக்கு அந்த ஆள் வேண்டாம். எனக்கும் அந்த ஆளுக்கும் இருக்க எல்லா உறவும் முடிஞ்சு போயிருச்சு. நானே இதை கழட்டி எரியுறேன் அந்த ஆளை வந்து பொறுக்கிட்டு போகச்சொல்லுங்க” என பார்வதி சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
 

ஜனனியும் அவளின் அம்மா பார்வதியும், நாச்சியப்பனின் குலதெய்வ கோயிலுக்கு செல்ல கிளம்புகிறார்கள். அவர்களை நந்தினி, ரேணுகா மற்றும் ஈஸ்வரி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் பேசுவதை ஜான்சி ராணி உட்கார்ந்து முறைத்து பார்த்து கொண்டு இருக்கிறாள்.பின்னர் அதை போய் குணசேகரனிடம் வத்திவைக்க “இத பாரு பெரியவனே, அந்த பொம்பளைய நீ வீட்ல இருக்க சொன்னதால தான் நான் பேசாம இருக்கேன். இனி அவ இங்க இருக்க வேணாம்பா” என விசாலாட்சி அம்மா குணசேகரனிடம் சொல்ல அவர் அது பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார். 
நாச்சியப்பனின் குடும்பம் குலதெய்வ கோயிலில் காத்துகொண்டு இருக்கிறார்கள். அப்போது நாச்சியப்பனிடம் அவருடைய ஆத்தா “இத்தனை வருஷமா இந்த கூட்டத்தை நீ எப்படி சமாளிச்சியோ தெரியலையே?” என அவரின் மூளையை சலவை செய்கிறார்.
 
 
வீட்டில் இருந்து தர்ஷினி ஸ்கூலுக்கு கிளம்ப, ஜான்சி ராணி ஓடி சென்று “நான் வேணும்னா பையை கொண்டு வந்த தரவா?” என அக்கறை இருப்பது போல நடிக்க “அது எங்க படிக்க போகுது. அடிக்கல போகுது” என கரிகாலன் உளற “எது அடிக்கவா?” என குணசேகரன் கேட்க “உங்க பொண்ணோட ஒரு முகம் தானே உங்களுக்கு தெரியும். அதுக்கு இன்னொரு முகம் இருக்கு” என போட்டு கொடுக்க அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். எப்படி சமாளிப்பது என தெரியாமல் தர்ஷினி முழிக்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
 

மீண்டும் ஃபுல் ஃபார்முக்கு வந்துவிட்டது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல். நாளுக்கு நாள் பரபரப்பு எகிறிக் கொண்டே போகிறது. 

Source link