7 Am Headlines today 2024 March 23rd headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்களை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் – அதிமுக தேர்தல் வாக்குறுதி.
கொ.ம.தே.க முன்னாள் வேட்பாளர் சூர்யமூர்த்தி மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி இதுவரை நடைபெற்ற சோதனையில் ரூ. 10 கோடி பறிமுதல்.
இலங்கை சிறையிலுள்ள தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் அவரது படகுகளை மீட்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் – அரசு தேர்வுகள் இயக்ககம்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மதுபான கடைகள் மூட வேண்டும் என உத்தரவு
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசியில் மார்ச் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
பாஜக சார்பில் நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி.
பாமக சார்பில் தருமபுரியில் சௌமியா அன்புமணி, கடலூரில் தங்கர்பச்சான், அரக்கோணத்தில் கே.பாலு போட்டி.
விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர், மத்திய சென்னையில் பார்த்தசாரதி போட்டி 

இந்தியா: 

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.
முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் புகார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
நடிகர் சிவராஜ்குமார் நடித்த படங்களுக்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்க பாஜக கோரிக்கை.
இமாச்சலபிரதேசம்: பாஜகவுக்கு ஆதரவளித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியது.
விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிப்பு. 

உலகம்: 

பூடான் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இசை நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச்சூடு தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு. 
இந்தோனேசியாவில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
இந்தியா- பூடான் இடையிலான நட்புறவு புதிய உயரங்களை எட்டட்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வைத்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம்: தீர்மானம் கொண்டு வர அமெரிக்க திட்டம். சூடானில் உள்நாட்டு போர்: 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு: 

ஐபிஎல் 2024ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் பஞ்சாப் – டெல்லியும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளும் மோத இருக்கின்றன.
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளித்தார் ஆனந்த் மஹிந்திரா

 

Published at : 23 Mar 2024 06:57 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link