Bank Holidays January 2024: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை தொடங்கியுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்குதடையின்றி பணப்பர்வர்த்தனையை மேற்கொள்ளலாம்.

உள்ளூர் விடுமுறை:

ஜனவரி மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை/திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் வங்கிகள் மூடப்படும். ஆனால், அதே பண்டிகைக்காக மற்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்படாது.

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு விடுமுறை:

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி கூடுதலாக நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 13ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அடிப்படையிலும், 14ம் தேதி வார இறுதி அடிப்படையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் விழாவிற்காகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு மக்கள் அதற்கேற்றவாறு தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை தின பட்டியல்:

ஜனவரி 1: புத்தாண்டு (திங்கள் கிழமை)

ஜனவரி 7: ஞாயிற்று கிழமை

ஜனவரி 11: மிஸினரி தினம் (மிசோரம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

ஜனவரி 12: சுவாமி விவேகானந்தா ஜெயந்தி (மேற்கு வங்க வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

ஜனவரி 13: இரண்டாவது சனிக்கிழமை

ஜனவரி 14: ஞாயிற்று கிழமை

ஜனவரி 15: பொங்கல்/ திருவள்ளூர் தினம் (தமிழ்நாடு, ஆந்திர பிரதேச வங்கிகளுக்கு விடுமுறை)

ஜனவரி 16: துசு பூஜை (மேற்கு வங்கம், அசாம் வங்கிகளுக்கு விடுமுறை)

ஜனவரி 17: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி

ஜனவரி 21: ஞாயிற்று கிழமை

ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி

ஜனவரி 25: ஹிமாச்சல் பிரதேச தினம் (ஹிமாச்சல் பிரதேச வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

ஜனவரி 26: குடியரசு தினம்

ஜனவரி 27: நான்காவது சனிக்கிழமை

ஜனவரி 28: ஞாயிற்று கிழமை

ஜனவரி 31: மீ-டேம்-மீ-ஃபை (அசாம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Нужны скины? https://tradelt.net обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий выбор…
Нужны скины? https://lis-skins.cc по выгодным ценам — большой выбор популярных предметов для Counter-Strike 2. Найдите редкие ножи, перчатки, оружие и…
Нужны скины? обмен скинов обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий…
A piece that exhibited the kind of patience that good writing requires, and a look at embervalleytradingpost continued that patient…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

சி.ஜே.பி எதிர்ப்பு: ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் விமானக் கட்டணம் உயரும்; கடைசி நிமிட முன்பதிவு சற்று உயர்வு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

CJP எதிர்ப்பு, டெல்லி பந்த்: நகரின் மையத்தில் மொபைல் நெட், மெட்ரோ, சாலைகள் தடை | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வான்ஸின் ‘ஒப்பந்த வேலையாட்கள்’ கருத்து ஆழ்ந்த புண்படுத்தும்: அரசாங்கம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வேதியியலாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விளம்பரப்படுத்த அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படலாம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

You May Have Missed
You May Have Missed

13 வயதில், தி லயன் கிங்கில் இளம் சிம்பாவாகப் பாட ஜேசன் வீவருக்கு 2 மில்லியன் டாலர்கள் டிஸ்னியால் வழங்கப்பட்டது; அவரது தாயார் அதற்குப் பதிலாக $100,000 மற்றும் ராயல்டிகளைத் தேர்ந்தெடுத்தார், மேலும் 32 ஆண்டுகளுக்குப் பிறகும் காசோலைகள் வரவுள்ளதாக அவர் கூறுகிறார் | ஆங்கில திரைப்பட செய்திகள் | ACTPnews.com

Нужны скины? https://lis-skins.cc по выгодным ценам — большой выбор популярных предметов для Counter-Strike 2. Найдите редкие ножи, перчатки, оружие и…