Actor Ram charan is bestowed with honorary doctorate for his contribution towards art from Vels university today


சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா ஏப்ரல் 13ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் இந்த விழாவானது நடைபெற்று வருகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண் கலந்து கொண்டுள்ளார். 
 

ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் :
நடிகர் ராம் சரண் திரைப்பயணத்தை கவுரவித்து பாராட்டும் வகையில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த விருதினை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீதாராம் வழங்க உள்ளார். மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் ஷங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 
முக்கிய பிரமுகர்களின் வருகை :
மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் சந்திரயான் விண்கல திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் டாக்டர் பி. வீரமுத்துவேலுவுக்கும் பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சர்வதேச அளவில் பிரபலம் :
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமா துறையில் கால் பதித்து இருந்தாலும் அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் ராம் சரண். ஏராளமான படங்களில் நடித்துள்ள ராம் சரணுக்கு எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் நடித்தது மிக பெரிய பெயரை பெற்று கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் அவரின் மதிப்பு உயர்ந்துள்ளது. அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமூக அரசியல் அமைப்பை சார்ந்த ஒரு ஆக்ஷன் படமான “கேம் சேஞ்சர்” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 
 

‘கேம் சேஞ்சர்’ படம் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார் ஷங்கர். கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
புச்சி பாபுவின் RC16 :
‘கேம் சேஞ்சர்’ படத்தை தொடர்ந்து புச்சி பாபு சானாவின் இயக்கத்தில் RC16 என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். கிராம கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர்  சிவராஜ்குமார் நடித்து வருகிறார். 

மேலும் காண

Source link