Ayodhya Ram temple in receives donations of around rs 25 crore in uttar pradesh


Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காணிக்கையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அயோத்தி ராமர் கோயில்:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.
பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். அதன்பின், 23-ம் தேதி, அனைவரின் பார்வைக்கும் கோவில் திறக்கப்பட்டது. 
சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் ரூ.25 கோடி வருமானம்
இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால் அயோத்தி திணறி வருகிறது. அதே நேரத்தில், கோடிக்கணக்கில் வருவாயும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த வருமான குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர் கூறியதாவது, ” கோயில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 10 கிலோ தங்கம், 25 வெள்ளி நகைகள், காசோலை, கோயில் உண்டியல் கிடைத்த காணிக்கை  என மொத்த ரூ.25 கோடி கிடைத்துள்ளது.  
ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெள்ளி, தங்க நகைகளை நன்கொடையாக அளிக்கிறார்கள்.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம்  செய்துள்ளனர். ராம் லல்லாவுக்கு நன்கொடையாக பெறப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை பராமரிப்பதற்காக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்” என்றார். 

மேலும் படிக்க
PM Modi: ”ஹரே கிருஷ்ணா’ கடலுக்கு அடியில் பூஜை! துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி!
தலைவலியாக மாறிய மம்தா! மகாராஷ்டிராவில் தொடரும் பஞ்சாயத்து – பிரச்னைக்கு தீர்வு காணுமா INDIA கூட்டணி?

மேலும் காண

Source link