ஐதராபாத் நகரிலுள்ள உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மின் இணைப்பு திரும்ப பெறப்படுள்ளதாக ஐதராபாத் கிரிக்கெட் வாரியம் (Hyderabad Cricket Association (HCA)) தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். திருவிழாவின் லீக் சுற்று போட்டிகளில் இன்று (05.04.2024) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் போட்டி தெலங்கானாவில் உள்ள உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தாததால் இந்த மைதானத்தின் மின் இணைப்பு நேற்று மாலை (04.01.2024) துண்டிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. மின் கட்டண நிலுவை தொகை ரூ.3 கோடியை எட்டியதால் தெலுங்கானா மாநில தெற்கு மின் விநியோகக் கழகம் (Telangana Southern Power Distribution Company Limited (TSSPDCL)) மின் இணைப்பை துண்டித்திருந்தது.
இந்த விவகாரத்தில் நீதிமனறம் தலையிட்டு ஐதராபாத் கிரிக்கெட் வாரியம் நிலுவையில் உள்ள தொகையில் பாதியை ரூ.1.63 கோடியை உடனடியாக செலுத்துமாறு உத்தரவிட்டது. அதோடு, மின் கட்டணத்தில் பாதி தொகை செலுத்தப்பட்டவுடன் அந்த மைதானத்திற்கு மின் இணைப்பை வழங்க வேண்டும் என்றும் மாநில மின் விநியோகக் கழகத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மைதானத்தில் மின் இணைப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே இன்றைய போட்டி நடக்குமா என்ற குழப்பத்திற்கு பதில் கிடைத்துள்ளது.
மேலும் காண