tribal scheduled and poor women Rs1 lakh will be paid directly, Rahul Gandhi said at a meeting held in Madhya Pradesh


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சயோனி மாவட்டத்தில் இருக்கும் தானோராவில் காங்கிரஸ் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் 3 முதல் 4 புரட்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பழங்குடியின, பட்டியலின மற்றும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதனால் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும்.

#WATCH | Seoni, MP: Congress leader Rahul Gandhi says, “…The Govt of India has 30 lakh vacancies. The people in the BJP don’t give them to you. They give you work on contract but don’t give you govt jobs. We will grant you 30 lakh govt jobs as our first step after the formation… pic.twitter.com/ls6zjhTPQF
— ANI (@ANI) April 8, 2024

வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பயிற்சி அளிக்க சட்டம் கொண்டுவரப்படும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சியின் போது திறமையாக பணியாற்றினால் அந்த நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளின் விலைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க சட்டம் கொண்டுவரப்படும்.
அரசு ஊழியர்கள் நியமனத்தில் ஒப்பந்த முறை ரத்து செய்யப்படும். 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். ஆஷா பணியாளர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் சம்பளம் இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும். 2025ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

#WATCH | Seoni, MP: Congress leader Rahul Gandhi says, “…Adivasi means the original owners…The first owners have the right to the country’s money, water, jungle and land. This is the fight of ideology…Adivasis constitute 8% of the population of the country…None of the… pic.twitter.com/DVXxBXvBK5
— ANI (@ANI) April 8, 2024

பழங்குடியினரை பாஜக வனவாசிகள் என அழைக்கிறது. ஆனால் உண்மையில் அவர் ஆதிவாசிகள். அவர்கள் தான் வனப்பகுதியின் உண்மையான உரிமையாளர்கள். ஆனால் நிலம், தண்ணீர், வனத்தின் மீது இருக்கும் உரிமைகளை பறிக்க பாஜக அவர்களை வனவாசி என அழைக்கிறது. அவர்களின் நிலங்களை பறித்து தொழிலதிபர்களுக்கு வழங்க நினைக்கிறது மத்தியில் இருக்கும் பாஜக அரசு.
நாட்டின் 200 முன்னணி நிறுவனங்களில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த யாரும் உரிமையாளராகவோ, மூத்த நிர்வாகியாகவோ இல்லை. 90 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே ஆதிவாசி” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link