Tamil block buster director ARMurugadoss Re entry Bollywood Lead Role of SalmanKhan | ARMurugadoss Bollywood Entry: மீண்டும் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்


ARMurugadoss Bollywood Entry: தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநராக பார்க்கப்படும் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் பாலிவுட் செல்ல உள்ளதாகவும், அதுவும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கானை வைத்து படம் இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
அஜித் நடித்த தீனா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ஏ.ஆர். முருகதாஸ். படம் ஹிட் கொடுத்ததும், அடுத்ததாக, விஜயகாந்தை என்றென்றும் நினைவு கூறும் படமாக இருக்கும் ரமணா படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருந்தார். ரமணா படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கவும் அடுத்ததாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி, 7ஆம் அறிவு, கத்தி, துப்பாக்கி, சர்க்கார் உள்ளிட்ட படங்கள் பிரமாண்ட வரவேற்பை பெற்றன. 
 
இதில், சூர்யா நடித்த கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி இருந்தார். அந்த படமும் வரவேற்பை பெற்றது. தமிழ், இந்தி மட்டுமில்லாமல், மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தையும், சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் படத்தையும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வெற்றிப்பெற்ற ஏ.ஆர். முருகதாஸ் வெற்றி இயக்குநராகவே பார்க்கப்படுகிறார். 

 
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே23 என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் சிறிது காலத்திற்கு இடைவெளி விட்டு மீண்டும் இயக்குனராகும் ஏ.ஆர்.முருகதாஸ், ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வார் என கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இந்தி திரையுலகில் படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் மீண்டும் படம் எடுக்கும் ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட் ஸ்டார் சல்மான்கானை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்படும் இந்த படம் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே அமீர்கானை வைத்து கஜினி படத்தின் ரீமேக்கை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியது பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. தற்போது மீண்டும் ஒரு ஸ்டாரை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் படம் இயக்க இருப்பதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

மேலும் காண

Source link