Tamil Nadu Bus Strike Transport Employees To Held Talks Again With Govt on February 21st


போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் வரும் 21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. 
.பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிற்சங்களுடன் 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வரும் புதன்கிழமை (பிப்ரவரி,21,2024) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.ஐ.டி.யு. மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”ஓய்வூர்தியர்களின் பஞ்சப் படியை அமல்படுத்த வேண்டும். எட்டு ஆண்டுகளாக நிலுவையில் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணியில்  இருக்கும் தொழிலார்கள் 14 மாதங்களுக்காக வழங்கபடாமல் இருக்கும் பஞ்சப் படியை தாமதிக்காமல் வழங்க வேண்டும். இல்லையெனில் இது மேலும் பிரச்னைகளை உருவாக்கும் என்று தெரிவித்திருக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அரசிடம் இவற்றை தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்க கோருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையில் ஓய்வூதியர்களின் பிரச்னை மறுக்க முடியாத நியாகம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ’15-வது ஊதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசு தரப்பில் பேச்சுவார்த்தை குழுவை அமைத்து ஆணை பிறப்பித்துள்ளோம். அதில் 14- பேர் இருக்கிறார்கள். இதற்கு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.’ என்று தெரிவித்திருக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.3,000 வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். வாரிசு வேலை, காலிப்பணியிடங்களை நிரப்புவதில்- இரண்டு விசயத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. Casul முறையில் ஏன் பணியாளர்கள் எடுக்கப்படுகிறார்கள்? நிரந்தர பணியிடம் இருக்கெனில் அவர்களை உரிய முறையில் தேர்ந்தெடுத்து அவர்களை பணியில் அமர்த்துங்கள் என வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நலத்துறை, மேலாண் இயக்குனர்கள், பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

மேலும் காண

Source link