7 Am Headlines today 2024 March 29th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
 திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை – திருமாவளவன்
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சவரனுக்கு ரூ.50 ஆயிரம் விற்பனை ஆகி வருகிறது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை; முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு – நாளை இறுதி பட்டியல் வெளியீடு
ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகம்; வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி மரணம் – வைகோ நேரில் அஞ்சலி
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பிரதமர் மோடி பற்றி மட்டுமல்ல, ஆளுநர் பற்றி கூட எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை பேசுவது இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா: 

100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு
மோடியை மிஞ்சும் வகையில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ராகுல் காந்தி பிரச்சாரம் – 4 இடங்களில் பேசுவதற்கு ஏற்பாடு
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்க முயற்சி; மோடி அரசால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை மேலும் 4 நாள் விசாரிக்க அனுமதி – நீதிமன்றத்தில் காரசார விவாதம்
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
உத்திர பிரதேசத்தில் கேங்க்ஸ்டர் ஆக இருந்து பின்பு அரசியல்வாதியாக மாறிய, முக்தார் அன்சாரி மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் தொகுதியில் ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சாவை காங்கிரஸ் களம் இறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
லிங்க்ட்- இன் தளத்தில் விரைவில் குறுகிய வடிவ வீடியோ ஆப்ஷன் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்: 

ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போட் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்தது ரஷ்யா.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு.
எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா – சீனா இடையேயான ஆலோசனை நிறைவு

விளையாட்டு: 

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: போபண்ணா இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்ததில் இருந்து மார்கஸ் ஸ்டோனிஸ் விடுவிப்பு.
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. 
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட்.

 

Published at : 29 Mar 2024 06:58 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link