Krishnagiri: ஓசூர் அருகே நில அதிர்வு! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள் – மாவட்ட ஆட்சியர் பரபரப்பு விளக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்த அஞ்செட்டி பகுதியில் இன்று இலேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல் அம்மாவட்டத்தில் உள்ள மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியிலும் நண்பகல் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் சம்பங்கி மார்தொட்டி முனியப்பன் கோயில் உள்ளது. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் சற்று பீதியடைந்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட அறிவிப்பில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆகவும், பூமிக்கடியில் 5 கி.மீ., நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்’ என கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் நில அதிர்வுகள் அரிது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஞ்செட்டி துணை வட்டாச்சியரான பன்னீர் செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள அறிக்கையில், ‘அஞ்செட்டி கிராமத்தில் 2.9 ரிக்டர் அளவுகோலில் பிற்பகல் 12.48 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வால் எவ்வித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படவில்லை’ என தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: CM MK Stalin: மாநில உரிமையை பறித்ததுதான் மோடி பிரதமராக செய்த முதல் வேலை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Source link