Israel Iran War News in Tamil Israel Iran War who will win america support Israel


ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் மற்றும் ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றின் மத்தியில், இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட 6 நாடுகள் அங்குள்ள தங்கள் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும்,  இந்த இரு நாடுகளுக்கும் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. 
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறது. இருப்பினும், அடுத்த இரண்டு நாட்களில் ஈரான் 100 ட்ரோன்கள் மற்றும் 12 ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 
தற்போதைய தாக்குதலுக்கு காரணம் என்ன..? 
கடந்த 1ம் தேதி சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், இரண்டு ஈரானிய தளபதிகள் உட்பட மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேலை பழிவாங்கும் முயற்சியாக நேற்று இரவு டிரோன் மற்றும் ஏவுகணைகள் அனுப்பியதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவை தலைவிட வேண்டாம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா: 
ஈரான் இஸ்ரேலை நேரடியாக தாக்குதலை நடத்தினால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா, சீனா, துருக்கி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தொலைபேசியில் பேசி, ஈரானை தாக்க வேண்டாம் என்று வற்புறுத்துமாறு கேட்டுக் கொண்டார். 
மறுபுறம், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கேமரூனும், ஈரான் வெளியுறவு அமைச்சரை அழைத்து, சர்ச்சை மேற்கொண்டு எடுத்து  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஈரானுடன் எந்த நாடுகள் உள்ளன..? 
ஈரானுடன் ஈராக், சிரியா, லெபனான், துருக்கி, கத்தார், ஜோர்டான் போன்ற நாடுகள் ஆதரவாக இருக்கும் என்பதால், ஈரான் இஸ்ரேலை தாக்கினால், மீண்டும் ஒரு பெரிய போர் மத்திய கிழக்கில் வெடித்து, முழு உலகமும் பாதிக்கப்படலாம். மேலும், அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏற்கனவே அறிவித்திருப்பதால், குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகள் வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். 
ரஷ்யா ஏற்கனவே ஈரானின் இராணுவ கூட்டாளியாக இருந்து வருகிறது. உக்ரைன் போரின் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது. எனவே, ரஷ்யா தனது நாடுகளான சீனா மற்றும் வடகொரியாவை ஈரானுக்கு ஆதரவாக அணி திரட்டலாம். பாகிஸ்தான் ஈரானை எதிரி நாடாக கருதுவதால் இஸ்ரேலுக்கு துணை நிற்கலாம். அதே நேரத்தில் இந்தியா இந்த விஷயத்தில் நடுநிலை வகிக்கும். 
மேலும், ஈரான் தனது பினாமி அமைப்புகளான ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரிய போராளி குழுக்களை பயன்படுத்தலாம். ஈரான் கடந்த காலங்களில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு உதவி செய்து அவர்களை பினாமி போர்களை நடத்த வைத்துள்ளது. 
இஸ்ரேல் – ஈரான் யார் கை ஓங்கும்..? 

இஸ்ரேலில் பாதுகாப்பு பட்ஜெட் – 24.2 பில்லியன் டாலர்கள்
ஈரானின் பாதுகாப்பு பட்ஜெட் – 9.9 பில்லியன் டாலர்கள்
இஸ்ரேல்-  612 விமானங்கள்
ஈரான் – 551 விமானங்கள்
இஸ்ரேல் – 2200 டாங்கிகள்
ஈரான் – 4071 டாங்கிகள்
இஸ்ரேல் – 67 போர்க்கப்பல்கள்
ஈரான் – 101 போர்க்கப்பல்கள்
இஸ்ரேல் – 1.73 லட்ச பாதுகாப்பு வீரர்கள்
ஈரான் – 5.75 லட்ச பாதுகாப்பு வீரர்கள்
இஸ்ரேல் – 4.65 லட்சம் ரிசர்வ் ராணுவ வீரர்கள்
ஈரான் – 3.50 லட்சம் ரிசர்வ் ராணுவ வீரர்கள் 

 

மேலும் காண

Source link