vijay tv Siragadikka Aasai serial coming week episodes promo revealed


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது. 
சிறகடிக்க ஆசை தொடர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அது ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே கொண்டாடப்படும். அந்த வகையில் விஜய் டிவியில் மட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் கலக்கி வரும் சீரியல் என்றால் அது “சிறகடிக்க ஆசை” தான். எஸ்.குமரன் இயக்கி வரும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆர்.சுந்தரராஜன், பாக்யலட்சுமி, அனிலா ஸ்ரீகுமார், ஸ்ரீதேவா, சல்மா அருண் கல்யாணி, ப்ரீத்தா ரெட்டி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 
இதுவரை நடந்தது என்ன? 
நேற்றைய எபிசோடில் மனோஜ் கனடா நாட்டுக்குச் செல்ல தனக்கு வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் கேட்பது போல காட்சிகள் இடம்பெற்றன. அவரை உள்ளூரில் ஒரு வேலைக்கும் சரியாக செல்வதில்லை என சொல்லி அண்ணாமலையும், விஜயாவும் திட்டி விடுகிறார்கள். இதனால் செய்வதறியாது திகைக்கும் மனோஜ் தன் பார்க் நண்பரிடம் சென்று கடன் கேட்டும் கிடைக்கவில்லை. மேலும் அந்த நண்பர் ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்வது போல காட்சிகள் ஒளிபரப்பானது. இப்படியான சென்று கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 
பிச்சைக்காரனாக மாறிய மனோஜ்
இந்நிலையில் இந்த வாரம் தொடர்பாக வெளியாகியுள்ள ப்ரோமோவில் மனோஜ் கோயில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுக்கிறார். அங்கு வரும் மீனாவைக் கண்டதும் மனோஜ் துண்டை வைத்து முகத்தை மூடிக் கொள்கிறார். ஆனாலும் மீனாவுக்கு சந்தேகம் வந்து என்னவென்று பார்க்கும்போது அது மனோஜ் தான் எனத் தெரிய வருகிறது. அதிர்ச்சியில் முத்துவுக்கு போன் செய்து உடனடியாக கோயிலுக்கு வருமாறு அழைக்கிறார். 

அவரை அழைத்துச் செல்ல முத்து முற்படும்போது, “நான் கோடீஸ்வரன் ஆகுறதை யாராலும் தடுக்க முடியாது” என குமுறுகிறார். வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில் முகத்தை மூடிக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் பிச்சைக்காரனை அழைத்துக் கொண்டு வந்ததாக விஜயா டென்ஷனாகிறார். ஆனால் வந்தது மனோஜ் எனத் தெரிந்ததும் அவர் ஆடிப்போகிறார். ஆக மொத்தம் இந்த வாரம் எபிசோடும் காமெடியாக நகரப்போகிறது. 

மேலும் காண

Source link