Ranbir Kapoor: முதலில் மனுசனா இரு.. அனிமல் நாயகன் ரன்பீருக்கு அம்பானி கொடுத்த மூன்று அறிவுரைகள்

பாலிவுட் நடிகர் ரன்பீன் கபூருக்கு மும்பையில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற லோக்மத் மகாராஷ்டிரர் விருதுகளின் 10வது சீசனில் இந்த ஆண்டின் சிறந்த மகாராஷ்டிரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட நடிகர் ரன்பீர் கபூர், ​​​​தனது வாழ்க்கையில் பின்பற்றும் மூன்று விதிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த மூன்று விதிகளையும் இந்தியாவின் டாப் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  அம்பானி கற்றுக்கொடுத்த மூன்று விதிகள் மூலம் இந்தியாவின் சிறந்த குடிமகனாக விளங்க முயற்சிப்பதாகவும், தான் ஒரு மும்பையைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

அம்பானி சொன்ன மூன்று விதிகள்

முதலாவது விதி, சிறப்பான வேலையைத் தொடர்ந்து செய்வது. அடுத்தது வெற்றியைத் தனது தலையிலும் மற்றும் தோல்வியைத் தனது இதயத்தில் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கூறியதாக கூறினார். அதாவது  ‘உன் தலையைக் குனிந்து வேலை செய். வெற்றியை உன் தலையிலும், தோல்வியை உன் இதயத்திலும் ஒருபோதும் எடுத்துக் கொள்ளாதே” என அம்பானி கூறியதாகக் கூறினார்.

மூன்றாவது “ஒரு நல்ல மனிதனாக மாற வேண்டும் என்பதுதான். அதாவது நான் நல்ல மகனாக, நல்ல தந்தையாக, நல்ல கணவனாக, சகோதரனாக, நண்பனாக மாற விரும்புகிறேன். மிக முக்கியமாக, நான் ஒரு நல்ல குடிமகனாக இருக்க விரும்புகிறேன். மும்பைக்காரனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இதுபோன்ற விருதுகள் எனக்கு மிகவும் முக்கியம் ”எனக் கூறினார்.

ரன்பீர் கபூர் நடித்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது அனிமல் படம். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி திம்ரி, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். பல்வேறு சர்ச்சைகள், கடுமையான விமர்சனங்களை அனிமல் படம் சந்தித்தது, இருந்தும் வெகுஜனத்திடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.900 கோடி வரை உலகளவில் வசூல் செய்தது. சமீபத்தில் இந்தப் படத்தில் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் மும்பையில் சந்தித்துக் கொண்டார்கள்.

அனிமல் படத்திற்கு பல்வேறு தளத்தில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்திய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட், கேப்டன் மில்லர் மற்றும் தளபதி 68 படங்களின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, கவிஞர் ஜாவித் அக்தர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள்.

ஜாவித் அக்தர் அனிமல் படம் குறித்து இப்படி கூறியுள்ளார் “ ஒரு படத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தனது ஷூவை நாக்கால் நக்கும்படி சொல்வது, ஒரு பெண்ணை அறைவது ஆகியவற்றை நியாயப்படுத்துகிறான். அந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் ஆகிறது என்றால் அது மிகவும் அபத்தானது”

அதே நேரத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா, நடிகைகள் த்ரிஷா, அலியா பட், அல்லு அர்ஜூன் உள்ளிட்டவர்கள் அனிமல் படத்தை பாராட்டினார்கள். தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அடுத்ததாக அனிமல் படம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source link