”பிரதமர் மோடி விஷ்வ குருவா? மவுன குருவா?” தூத்துக்குடி பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்!


 
உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்டார். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சிறுபான்மை இயக்கத்துக்கு எப்போதும் உறுதுணையாக திமுக இருக்கும். தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டததை எதிர்த்து உருவானது தான் திமுக.  கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் நவாஸ் கனியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
உழைப்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். ஊர் சுற்றுவதற்காக அரசியலுக்கு வரவில்லை. ஜனநாயகத்தை காப்பதற்காக தற்போது விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  தூத்துக்குடியில் மனிதநேயமற்ற துப்பாக்கிச் சூட்டை எடப்பாடி பழனிசாமி  ஆட்சி நடத்தியது. அதிமுக ஆட்சியின் கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.  
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பெரிய பொய்யை கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.  ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே உதாரணம்.   திமுகவுக்கு அதிமுகவுக்கு தான் போட்டி என்று எடப்பாடி பழனிசாமி கூறியது மகிழ்ச்சி தான்.
தேர்தல் நேரத்தில் அதிமுகவை சந்திக்க திமுக தாயராக உள்ளது. உதயநிதி பற்றி பழனிசாமி பேசுவது எனக்கு இரண்டாவது மகிழ்ச்சி. உதயநிதி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதை பற்றி கவலையில்லை. ஆனால், மக்களுக்கு நன்மை கிடைத்தால் மகிழ்ச்சியே.
பாஜகவை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசாதது ஏன்? எஜமான விசுவாசம் பாஜகவை விமர்சிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமியை தடுக்கிறதா? பாசாங்குக்காக 10 வார்த்தைகள் கூட பாஜகவை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசுவில்லை.  இலங்கை கடற்படையின் தாக்குதலை தட்டிக் கேட்டால் மத்திய அரசு அமைதி காப்பது ஏன்?
தமிழ்நாட்டு மீனவர்களுக்காக வாய் திறக்காத பிரதமர் மோடி விஷ்வ குருவா? மவுன குருவா? மீனவர்கள் பாதுகாப்பாக வாழ இந்தியாவில் வலுவான மத்திய அரசு அமைய வேண்டும் என்று 2014ல் மோடி பேசினார். தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது யார் ஆட்சியில்?  வாக்கு கேட்டு தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்காமல் எதிர்க்கட்சிகளை மட்டுமே விமர்சிக்கிறார்” என்றார் முதலமைச்சர்  ஸ்டாலின். 

மேலும் காண

Source link