Ashok Selvam: | Ashok Selvam:

Actor Ashok Selvam: கீர்த்தி மூலம் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் தயாரிப்பில் ‘ப்ளூ ஸ்டார்’ : 
நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பா. ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியன் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இரட்டை ஹீரோ படமான இப்படத்தில் ஷாந்தனு மற்றொரு நாயகனாக நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், பிருத்விராஜன், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. 
இசை வெளியீட்டு விழாவில் அசோக் செல்வன்:
இந்நிலையில் ‘ப்ளூ ஸ்டார்’ இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தனர்.  அப்போது மேடையில் பேசிய அசோக் செல்வன்,  “ப்ளு ஸ்டார் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆனது.  
வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டார்களா? என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கி கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும், ப்ளு ஸ்டார் படம், ஒரு ஆறுதல், நம்பிக்கையை கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது.  
”ரொம்ப ஸ்பெஷல் ஆன படம்”
இந்த படத்தில் நடித்தவர்கள் எனது குடும்பத்தில் ஒருவராக இணைந்துவிட்டனர். ஏற்கனவே, இந்த படம் எனக்கு மனைவி, சகோதரர் என அனைத்து உறவையும் கொடுத்திருக்கிறது. முதலில் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். சிலர் பேசுறதுக்கும், செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இருக்காது.
ஆனால், ரஞ்சித் என்ன பேசுறாரோ, அது போலவே நடப்பவர். அனைவரையும் சமமாக நடத்துவார். இந்த மாதிரியான மனிதர்களை நான் பார்த்ததில்லை.  கீர்த்தி மூலமாக தான் எனக்கு இந்த படம் கிடைத்தது. ரொம்ப நன்றி. கீர்த்தி தான் இந்த படத்தில் முதலில் கமிட் ஆனார்.
கீர்த்தி மூலம் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி. லவ் யூ. எந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நான் இவ்வளவு நேரம் பேசியதில்லை. இந்த படம் என்னை அவ்வளவு பேச வைத்திருக்கிறது” என்றார். 

மேலும் படிக்க
Ayodhya Ram Mandir: ராமர் பிறந்த இடத்திலேயே கோவில்; பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் – இளையராஜா
Amala Paul: கர்ப்பமாக இருக்கும் அமலா பாலை நீச்சல் குளத்தில் தூக்கிச் சுற்றிய கணவர் – ஹார்ட்டின் பறக்கவிடும் ரசிகர்கள்!

Source link