கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்கள் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக, அதிகாரிகள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். குறிப்பாக அதிமுக வேட்பாளர் தங்கவேல் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி ஆகியோருடன் சென்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல், பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தாந்தோணிமலை மில்கேட் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான நபர்களுடன் ஊர்வலமாக சென்று முன்னாள் எம்.பி நாட்ராயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில், மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அனுமதி இன்றி ஆயிரக்கணக்கான நபர்களை கூட்டம் கூட்டி, கொடி பிடித்துக் கொண்டு பேரணியாக சென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது கரூர் நகர காவல் துறையும், பாஜக வேட்பாளர் மீது தாந்தோணிமலை காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
quoten wetten basketball nba (https://www.Graffeoandassociates.com/Der-einfluss-von-sponsoren-auf-die-darts-welt/)
casino vklad 1 Kč Revolut od 10 kč
kombiwette eine falsch my blog; Basketball Unentschieden Wetten
wettanbieter ohne deutsche lizenz Also visit my blog; basketball over Under wetten
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

"ஏன் நாங்க கோட்-சூட் போடக்கூடாதா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?" – கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா | ACTPnews.com

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: “தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்” – அமைச்சர் ரமேஷ்| Leak of HR&CE Department secrets: “They are spying out of fear of having committed wrongdoing” – Minister Ramesh. | ACTPnews.com

“கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?” – திமுக ஊழல் ஆதாரம் குறித்த கேள்விக்கு அருண்ராஜ் கிண்டல் பதில் | Minister Arun Raj Responds to Corruption Charges Against Previous Government | ACTPnews.com

app für sportwetten Feel free to surf to my web site – basketball Wetten Online