IPL 2024 Chennai Super Kings vs Gujarat Titans, 7th Match Head to head team squad full details here


தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனின் ஏழாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)   மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஐடி) இடையே இன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. 
ஐபிஎல் 2022ல் குஜராத் அணி புதிதாக களமிறங்கியதற்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.  இதில், அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 3 முறை சென்னை அணியை வீழ்த்தியுள்ளது.  சென்னை அணி ஒரு இறுதிப்போட்டி உட்பட 2 முறை குஜராத் அணியை வீழ்த்தியுள்ளது. 
நேருக்குநேர்:



சென்னை சூப்பர் கிங்ஸ்
 
குஜராத் டைட்டன்ஸ்


5
விளையாடிய போட்டிகள்
5


2
வெற்றி பெற்றது
3


3
இழந்தது
2


0
முடிவு இல்லை
0


178
அதிக ஸ்கோர்
214


133
குறைந்த ஸ்கோர்
147

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதே நேரத்தில் சுப்மன் கில் தனது கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கொடுத்தார். 
இரு அணிகளுக்கு இடையே அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் முழு லிஸ்ட் இதோ!



புள்ளிவிவரங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்


1வது பேட்டிங் செய்து வெற்றி
1
0


சேஸிங் வெற்றி
1
3


அதிகபட்ச ஸ்கோர்
178
214


குறைந்தபட்ச ஸ்கோர்
133
137


அதிக ரன்கள்
ருதுராஜ் கெய்க்வாட் (304 ரன்கள்)
விருத்திமான் சஹா (169 ரன்கள்)


அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்
ருதுராஜ் கெய்க்வாட் – 92 
சாய் சுதர்சன் – 96


அதிக சிக்ஸர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் – 17 சிக்ஸர்கள்
டேவிட் மில்லர், சாய் சுதர்சன் & ரஷித் கான் – தலா 6 சிக்ஸர்கள்


அதிக பவுண்டரிகள்
ருதுராஜ் கெய்க்வாட் – 23 பவுண்டரிகள்
சுப்மன் கில் – 20 பவுண்டரிகள்


அதிக அரைசதங்கள்
ருதுராஜ் கெய்க்வாட் – 4 அரைசதங்கள்
விருத்திமான் சஹா – 2 அரைசதங்கள் 


அதிக விக்கெட்கள்
பதிரானா – 6 விக்கெட்கள்
முகமது ஷமி – 7 விக்கெட்கள்


சிறந்த பந்துவீச்சு
டுவைன் பிராவோ – (3/23)
மோஹித் சர்மா – (3/36)

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் லீக் போட்டிகளில் ஒருமுறை மோதியுள்ளது. இந்த போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 172 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக, இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 
இரு அணிகளின் விவரம்: 
சென்னை சூப்பர் கிங்ஸ்: 
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தாபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் ரஷீத், ஷர்துல் தாகூர் , நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர், அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், ஆர்எஸ் ஹங்கர்கேகர், ஆரவெல்லி அவனிஷ்
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா, ஷரத் பிஆர், நோ அபினவ் மனோகர், நோ அகமது, மானவ் சுதர், மேத்யூ வேட், கேன் வில்லியம்சன், ஷாருக் கான், ஜோஷ்வா லிட்டில், தர்ஷன் நல்கண்டே, கார்த்திக் தியாகி, சுஷாந்த் மிஸ்ரா, சந்தீப் வாரியர், ஜெயந்த் யாதவ்
 

மேலும் காண

Source link