Dalit Groom Assaulted For Riding Horse During Wedding Procession In Gujarat | Shocking Video: ”நீ எப்படி குதிரையில் ஏறலாம்” : பட்டியலின மாப்பிள்ளையை கொடூரமாக தாக்கிய கும்பல்


Atrocities On Dalits: குஜராத்தில் குதிரையில் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
குதிரையில் சென்ற பட்டியலின இளைஞர்:
இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது குஜராத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி, குதிரையில் சென்ற பட்டியலின சமுகத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் நேற்று திருமண ஊர்வலம் ஒன்று நடந்தது. இந்த திருமண ஊர்வலத்தில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டர். அப்போது, மணமகளின் வீட்டிற்கு செல்ல மணமகன் விகாஸ் சாவ்டாவை குதிரையில் ஏறி ஊர்வலமாக சென்றுக் கொண்டிருந்தனர். 

A #Dalit groom was assaulted for riding a horse in his wedding procession in a village in #Gujarat’s #Gandhinagar district. Police have rounded up four persons from upper caste Thakor community. pic.twitter.com/SQKyiQkLvt
— Hate Detector 🔍 (@HateDetectors) February 13, 2024

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், குதிரையில் சென்றுக் கொண்டிருந்த மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை மறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இவருடன் 4 பேரும் இருந்துள்ளனர். குதிரையில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை சாதி பெயர் சொல்லி இழிவாக பேசியிருக்கின்றனர்.
கொடூரமாக தாக்கிய 4 பேர்:
மேலும், அவரை தாக்கியும் உள்ளனர். குதிரையில் அமர்ந்திருந்த கீழே இறங்க சொல்லி  தாக்கி உள்ளனர்.  குதிரையில் இருந்து மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை கீழே தள்ளி அறைந்துள்ளனர். மேலும், “எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குதிரையில் செல்ல முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது” என்று கூறி சரமாரியாக தாக்கி உள்ளனர். 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர்.  சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாக்கூர் மற்றும் அஷ்வின் தாக்கூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண

Source link