மீண்டும் பைக்கில் ஏறிய டிடிஎஃப் வாசன்… ஆனால் செய்த‌து என்ன தெரியுமா?

பஞ்சர் லிக்விட் திரவத்தை பரிசோதனை செய்ய இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் யுடூபர் டிடிஎப் வாசன் பயணம் செய்தார்.

பிரபல யூட்டுபரும் மோட்டார் சைக்கிள் சாகச வீரருமான டிடிஎஃப் வாசன், காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விபத்து ஏற்படுத்தியதின் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையம் டிடிஎஃப் வாசன் உடைய வாகன ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து வாகனங்களை ஓட்ட தடை விதித்துள்ளது.

அதன்பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த டிடிஎஃப் வாசன், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

வாகனங்களை ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டிடிஎஃப் வாசன், புதியதாக ஆட்டோமொபைல் தொழில் தொடங்கி, இருசக்கர வாகனங்களுக்கு தேவையான ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் பஞ்சர் லிக்விட் திரவத்தை விற்பனை செய்யும் கடையை திறந்துள்ளார்.

இந்நிலையில், டிடிஎஃப் வாசன் தனது நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள பஞ்சர் லிக்விட் திரவத்தை பரிசோதனை செய்தார். அதன்படி, உயர்ரக இருசக்கர வாகனத்தின் டயர்களில், பஞ்சர் லிக்விட் திரவத்தை செலுத்தி விட்டு, டயரில் 38 ஆணிகளை அடித்துக்கொண்டு, தனது நண்பர் இருசக்கர வாகனத்தை ஓட்ட, டிடிஎஃப் வாசன் ஹெல்மெட் அணிந்து கொண்டு பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். .

இது குறித்த வீடியோவை டிடிஎஃப் வாசன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.