IPL Records Six to Win Off Last Ball in IPL Saurabh Tiwary Rohit Sharma Ambati Rayudu


ஐ.பி.எல் ரெக்கார்ட்:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் கடைசி பந்தில் வெற்றி பெற உதவிய ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சிக்ஸர் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:
கடைசி பந்தில் சிக்ஸர்…சம்பவக்காரன் ரோஹித் சர்மா:
கடந்த 2009 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 48 -வது லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெக்கான் சார்ஜர்ஸ் அணி களம் இறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பின்னர் வந்த வீரர்களும் ஓரளவிற்கு ரன்களை சேர்க்க ஒரு கட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு வெற்றி பெற 13 பந்துகளில் 32 ரன்கள் தேவை பட்டது.
அப்போது களத்தில் நின்றவர் ஹிட்மேன் ரோகித் சர்மா. அந்த போட்டியில் ருத்ரதாண்டம் ஆடினார் ரோகித் சர்மா. முதல் 6 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். அவர் அடித்த மூன்றாவது பந்தில் சிக்ஸர் பறந்தது. அந்த சிக்ஸர் தான் ஐபிலெ தொடரில் அதிக தூரம் பறக்கவிடப்பட்ட 9 வது சிக்ஸர். அந்தவகையில் கடைசி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டார். பரபரப்பான அந்த போட்டியில் தன்னுடைய சிக்ஸரின் மூலம் டெக்கான் அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார் ஹிட்மேன் ரோகித். ஐ.பி.எல் தொடரில் கடைசி பந்தில் சிக்ஸர் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோகித் சர்மா. பின்னர் தான் அம்பத்தி ராயுடு, செளரப் திவாரி, ப்ராவோ, தோனி உள்ளிட்டோரும் கடைசி பந்தில் வெற்றியை தேடித்தந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 
 
 

மேலும் காண

Source link