Plane Wheel Comes Out During TakeOff Flattens Cars Parked Below


Watch Video: அமெரிக்காவில்  விமானம் ஒன்று பறக்கும்போது அதில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழன்று விழுந்த விமானத்தின் டயர்:
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானுக்கு விமானம் சென்றுக் கொண்டிருந்தது.  இந்த விமானம் ரன்வேயில் இருந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது.
அந்த நேரத்தில், திடீரென்று விமானத்தின் சக்கரம்  ஒன்று கழன்று விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது. விமான நிலைய ஊழியர்கள் கார் நிறுத்தப்பட்ட இடத்தில் டயர் விழுந்து ஓடியது. இதில், அங்கிருந்த கார்கள் பல சேதம் அடைந்துள்ளன.  
விமானத்தில் 249 பேர் பயணித்த நிலையில், விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் ஒரு சக்கரம் மட்டும் கழன்று விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக  லாஸ் ஏஞ்சல்ஸில் வெளியேற்றப்பட்டனர். 
வைரல் வீடியோ:
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் இருந்தது. விமானத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கோயிங் ரக விமானம் தொடர்ச்சியாக தரக்கட்டுப்பாடு பிரச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. 
கடந்த ஜனவரி மாதம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கதவு உடைந்து கீழே விழுந்தது.  இதனால், விமானம் அவசரமாக தரையிறங்கப்பட்டது.
இதுபோன்ற தரக்கட்டுப்பாட்டு சிக்கல்களை தீர்க்க 90 நாட்களில் செயல் திட்டத்துடன் வர வேண்டும் என்று அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டு இருந்து நிலையில், மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

Full HD video of United flight UA35 taking off from San Francisco and losing a wheel!😱👇Boeing always surprises us. Every day!🤪pic.twitter.com/U1m9vtiZV1
— ShanghaiPanda (@thinking_panda) March 8, 2024

இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானம் வானத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் ஒரு சக்கரம் கழன்று விழுந்தது போன்று வீடியோவில் உள்ளது. 

மேலும் படிக்க
Rajasthan Electric Shock: 14 குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு! சிவராத்திரி விழாவில் அதிர்ச்சி!
இங்கிலாந்து பிரதமரின் மாமியார் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்- பிரதமர் வாழ்த்து

மேலும் காண

Source link