பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், இரண்டாம் நாள் ட்ரையத்லான் பயற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாலீசில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் வீரர்கள் பங்கேற்று, ஒவ்வொரு போட்டிகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு விளையாட்டுகளிலும், பதக்கங்களை குவிக்கும் முனைப்பில் வீரர்கள் உற்சாகமாக செயல்பட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், ட்ரையத்லான் போட்டிக்காக இன்று நடைபெற இருந்த இரண்டாம் நாள் பயிற்சி ரத்து செய்யப்படுவதாக பாரீஸ் ஒலிம்பிக் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அங்கு உள்ள அற்றில், தண்ணீரின் தரம் குறைந்துள்ளதால், நீச்சலுக்கான பயிற்சி ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், திட்டமிட்டபடி, பதக்கத்திற்கான ட்ரையத்லான் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 20 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தரம் குறைந்ததால் திடீரென ட்ரையத்லான் இரண்டாம் நாள் பயிற்சி ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.