Congress leader mallikarjun kharge Not Clapping For Narasimha Rao’s Bharat Ratna Are False | Fact Check: நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா; விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே கைதட்டவில்லையா


நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னாவுக்கு விருது வழங்கப்பட்ட விழாவில், நரசிம்ம ராவ் மகன் அந்த விருதை பெறும்போது காங்கிரஸ் தலைவர் கார்கே கை தட்டவில்லை என்பதைக் காட்டும் புகைப்படம் இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாரத ரத்னா விருது:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மறைவுக்கு பின், மார்ச் 30, 2024 அன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. விருதை நரசிம்ம ராவ் மகன் பிரபாகர் ராவ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருதை அவர் சார்பாக பெற்றார். 
குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரபாகர் ராவ் விருதை பெற்றுக் கொண்டு குடியரசுத் தலைவருடன் புகைப்படம் எடுக்கும் போது மோடி, அமித் ஷா ஆகியோர் பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
போலி செய்தி:
மேலும், அந்த காட்சியில், முன் வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் கார்கே, கை தட்டாமல் இருப்பது போன்ற காட்சியையும் காட்டுகிறது. இந்த காட்சியானது சமூக  வலைதளங்களில் பெரும் வைரலானது,  இது குறித்து ட்விட்டரில் ஒரு பயனர் தெரிவிக்கையில் ”முதல் வரிசையில் அமர்ந்து, கைதட்டாத இருப்பவர் மல்லிகார்ஜுன கார்கே மட்டுமே; இது காங்கிரஸ் மனநிலையை பிரதிபலிக்கிறது” என்றும் தெரிவித்தார்.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் , இந்த வீடியோவை குறித்து ஆராயப்பட்டது.
பிரபாகர் ராவுக்கு வழங்கப்பட்ட விருது குறித்த முழு காணொளியில் ஆராய்ந்தபோது, முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது கார்கே கைதட்டியது தெரியவந்துள்ளது. 
இது தொடர்பாக யூடியூப் தளத்தில், பாரத ரத்னா வழங்கப்பட்ட குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ தளத்தில் காணொளி வீடியோவை ஆராய்ந்த போது, 2.00 நேர அளவில் முன்னாள் பிரதமர் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அவரது மகன் பிரபாகர் ராவ் விருதை வாங்க எழுந்து வந்தார்,அதனை தொடர்ந்து 2.05 மணிளவில் காங்கிரஸ் தலைவர் கார்கே கை தட்டுகிறார். இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2.53 மணியளவில், பிரபாகர் ராவுடன்  கை குலுக்குவதையும் காண முடிகிறது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இதுபோன்ற தவறான செய்தியை பரப்புவது மிகவும் மோசமான செயல் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
Also Read: Power Pages-4: இந்தியாவில் தேர்தலை நடத்த முடியாது என்ற உலக நாடுகள்.. திருவிழா போல் நடத்திய நேருவின் கதை தெரியுமா! 

Source link