அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி கொலை… அதிர்ச்சி

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் ஏவிஎம் செட் அருகே உள்ள அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் எட்டாவது நடைமேடை உள்ளது. இந்த நடைமேடை அருகே நேற்று இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி மக்களோடு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.

தகவலறிந்து சென்ற போலீசார், அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விசாரணையில் அந்த இளைஞர், சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பிராங்கிளின் என்பதும், 25 வயது என்பதும் தெரிய வந்தது. அரக்கோணம் ஏவிஎம் சர்ச் பகுதியில் வசித்து வரும் தன்னுடைய பெரியம்மா வீட்டுக்கு வந்து சில நாட்களாக தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

முன்விரோதம் காரமாக கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.