7 Am Headlines today 2024 March 14th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிடம் இருந்து எப்படி தண்ணீர் பெறுவது என்பது எங்களுக்கு தெரியும் – அமைச்சர் துரைமுருகன்
குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான குஷ்புவின் கருத்துக்கு நடிகை அம்பிகா கண்டனம்
இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரணாக உள்ளது எனவும் மக்களுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணி எனவும் எடப்பாடி பழனிசாமி பேச்சு 
வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் முன்னிலையில் ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என சட்டமன்ற செயலகம் அறிவிப்பு. விரைவில் அமைச்சர் பொறுப்பேற்க முதலமைச்சர் பரிந்துரை
அமைச்சராக பொன்முடி இன்று பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி டெல்லி பயணம்; 16ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். 
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – மார்ச் 15ஆம் தேதி வரை இருந்த கால அவகாசம் மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு
பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு; அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குபதிவு

இந்தியா: 

நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை – மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் மொத்தம் 72 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு. 
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது பாரதிய ஜனதா கட்சியின் மோசமான வாக்கு வங்கி அரசியல் – டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்
பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் குறித்து நாளை ஆலோசனை கூட்டம்
அமெரிக்காவில் சட்டம் படிக்க போகும் சமையல்காரர் மகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு; படிப்பை முடித்துவிட்டு நாட்டிற்கு சேவையாற்ற வரவேண்டும் எனவும் அறிவுரை
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் – இந்திய தேர்தல் ஆணையம்
குடியுரிமை திருத்தச் சட்டம் என்.ஆர்.சி.யுடன் தொடர்புடையது; அதனால் அதை எதிர்க்கிறோம் – மம்தா பானர்ஜி
ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு வேலைகளில் 50 சதவீத ஒதுக்கீடு.. பெண்களுக்கு வாக்குறுதிகள் தெரிவித்த காங்கிரஸ்

உலகம்: 

உக்ரைன் போரில் அதிர்ச்சி: ஒரே நாளில் 234 வீரர்களை கொன்று குவித்த ரஷிய ராணுவம்
பிரேசிலில் துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்திய நபர் – 17 பேர் பத்திரமாக மீட்பு, இருவர் படுகாயம்
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் – அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்
எடிட் செய்யப்பட்ட குடும்ப புகைப்படத்தால் சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேத்தரின்

விளையாட்டு 

டெல்லி குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்கள் முன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் – ரிஷப் பண்ட்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
ஷபாலி வர்மா அதிரடி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி

Published at : 14 Mar 2024 06:53 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link